ARTICLE AD BOX
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ்.
கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முகமது சிராஜ்இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சிராஜ், " காலையில் எழுந்ததும் உன்னால் இன்று சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
கூகுளில் ரொனால்டோ படம் போட்டு 'BELEIVE' என எழுதியிருக்கும் படத்தை டவுன்லோடு செய்து வால்பேப்பர் ஆக வைத்துகொண்டேன். ஏனென்றால் அவர் ஒரு போதும் விட்டுக்கொடுக்காமல் விளையாடுவார்.
அதே மனநிலை எனக்கும் வேண்டும் என்று அதனை வால்பேப்பராக வைத்துக்கொண்டேன். நம்பிக்கை மிகவும் முக்கியமானது" என்று கூறியிருக்கிறார்.

4 months ago
6







English (US) ·