ENG vs IND: "இந்தியா தவறியது அங்குதான்... 2-வது டெஸ்டில் அவரை இறக்குங்கள்" - கவாஸ்கர் அறிவுரை என்ன?

6 months ago 7
ARTICLE AD BOX

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், பிட்ச் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்தும், 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறது இந்தியா.

148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை கில் அண்ட் கோ படைத்திருக்கிறது.

ENG vs INDENG vs IND

தோல்விக்குப் பிறகு கேப்டன் கில், "நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம். லோயர் ஆர்டர் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை.

வேகமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கிறோம். அதை சரி செய்வதற்கு என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும்.

நாங்கள் ஓர் இளம் அணி, இன்னுமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்." என்று காரணங்களை அடுக்கினார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் 10,000 ரன்களை அடித்த முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், இங்கிலதிக்கெதிரான தோல்விக்கான கரணங்கள் குறித்தும், இரண்டாவது டெஸ்டில் யாரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

சோனி ஸ்போர்ட்ஸிடம் பேசிய கவாஸ்கர், "முதல் டெஸ்டில் ஒட்டுமொத்த பாராட்டுகளும் இங்கிலாந்து அணிக்கே. இந்தியா 5 சத்தங்கள் அடித்தபோதும் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர்.

அதுதான், அவர்களை இறுதியில் விக்கெட்டுகள் எடுக்க வைத்தது. அங்குதான் இந்தியாவும் தவறியது. ஏனெனில், கூடுதல் ரன்கள் சற்று வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

பேட்டிங்குக்கு இது நல்ல பிட்ச் என்பதால், பவுலர்களை விமர்சிப்பது கடினம். பும்ரா சிறப்பாகப் பந்துவீசினார். அவருக்கு யாரேனும் உறுதுணையாக இருந்திருந்தால் அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும்.

சுனில் கவாஸ்கர்சுனில் கவாஸ்கர்

எனினும் இது முதல் போட்டிதான். பாடங்களைக் கற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த போட்டிக்கு இன்னும் 8 நாள்கள் இருக்கிறது.

இரண்டாவது டெஸ்டில் ஷர்துல் தாக்கூருக்குப் பதில் குல்தீப் யாதவ் அணிக்குள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் பர்மிங்காம் மைதானம் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளருக்கு (wrist spinner) சற்று சாதகமாக இருக்கும்.

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்Kuldeep Yadav | குல்தீப் யாதவ்

இரண்டாவது டெஸ்டிலும் எதுவும் சரியாக நடக்கவில்லை என்றால், ஒருவேளை சாய் சுதர்சன், கருண் நாயர் கழற்றிவிடப்படலாம்.

ஆனால், நான் அவ்வாறு விரும்பவில்லை. அதேசமயம், வாஷிங்டன் சுந்தரை ஆப்ஷனாகப் பார்க்கலாம்.

அவரை அணியில் கொண்டுவருவதன் மூலம் அணிக்கு உறுதியான பேட்டிங் கிடைக்கும். பவுலிங் யூனிட்டும் பன்முகமாக இருக்கும்." என்று கூறினார்.

ஜூலை 2-ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் வேண்டுமா, அப்படி வேண்டுமென்றால் எந்தெந்த வீரர்களை உட்காரவைத்து யார் யாரை களமிறக்க வேண்டும் என்பது குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்! | In Depth
Read Entire Article