ENG vs IND: நம்பர் 3 பேட்டர்; வாழ்த்தி அனுப்பிய புஜாரா; சாய் சுதர்சனுக்கு இருக்கும் சவால் என்ன?

6 months ago 8
ARTICLE AD BOX

'அறிமகமாகும் சாய் சுதர்சன்!'

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியிருக்கிறது.

முதல் போட்டியிலேயே சாய் சுதர்சனை இந்திய அணி அறிமுகப்படுத்தியிருக்கிறது. புஜாராவிடமிருந்து தனது அறிமுக தொப்பியை வாங்கிய சாய் சுதர்சன், தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்க பெவிலியனில் ஆர்வமோடு காத்திருக்கிறார்.

சாய் சுதர்சன்சாய் சுதர்சன்

சாய் சுதர்சன் உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளிலும் கலக்கியிருந்தார். கடைசியாக ஐ.பி.எல் தொடரிலும் ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டார். ஐ.பி.எல்-யை வைத்து சாய் சுதர்சனை அணியில் எடுக்கிறார்களா எனக் கேள்வி எழுந்தது.

ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக முதல் டெஸ்ட் - போட்டிக்குமுன் கேப்டன் கில் பேசியவை!

அதற்கு, "நீண்ட நாட்களாகவே சாய் சுதர்சனைக் கவனித்து வருகிறோம். அவர் ரெட்பால் கிரிக்கெட்டிலும் நன்றாகத்தான் ஆடியிருக்கிறார்.

அணியில் இடமில்லாமல் இருந்தது, அதனால்தான் அவரை இத்தனை நாட்களாக எடுக்காமல் இருந்தோம்" எனக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்.

Sai SudharsanSai Sudharsan

சாய் சுதர்சன் கடந்த ஆண்டே இங்கிலாந்துக்குச் சென்று கவுண்டி கிரிக்கெட்டிலெல்லாம் ஆடி வந்தார். பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பான ஆயத்தப் போட்டியில் இந்திய A அணிக்காக ஆடியிருந்தார். ஆக, அவர் இந்திய அணியின் ரெட்பால் கிரிக்கெட்டில் ஆட தயாராகத்தான் இருந்தார். இந்திய அணியின் வாய்ப்பு கிடைப்பதற்குத்தான் தாமதமாகிவிட்டது.

ENG vs IND: "இப்படியும் நடக்குமா?" - பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து கபில் தேவ்

விராட் கோலியும் ரோஹித்தும் ஓய்வு பெற்றுவிட்டதால் இந்திய அணியில் வெற்றிடம் உருவானது. கோலி ஆடிய நம்பர் 4 இடத்தை கில் தனதாக்கிக் கொண்டார். இதனால் கில் ஆடிய நம்பர் 3 இல் யார் ஆடுவார் எனும் கேள்வி எழுந்தது.

அதற்கான விடையாகத்தான் சாய் சுதர்சன் வந்திருக்கிறார். சாய் சுதர்சன் இந்திய அணிக்கு அறிமுகமாகிறார் என்றும் அவர் நம்பர் 3 இல் ஆடுவார் என்றும் கேப்டன் கில்லே டாஸில் அறிவித்துவிட்டார்.

Sai SudharsanSai Sudharsan

'புஜாரா செண்டிமெண்ட்!'

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் கூடி நிற்க வர்ணனை செய்ய வந்திருக்கும் புஜாரா, சாய் சுதர்சனுக்கு அந்த 317 என்கிற எண் பொறிக்கப்பட்ட தொப்பியை வாழ்த்தி வழங்கினார்.

புஜாரா இந்தத் தொப்பியை வழங்கியது கூடுதல் ஸ்பெசலான தருணம். ஏனெனில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்த நம்பர் 3 பொசிஷனில் இந்திய அணிக்கு தூணாக நின்றவர் புஜாரா. அவர் சாய் சுதர்சனை வாழ்த்தி நம்பர் 3 பொசிஷனுக்கு வழியனுப்பி வைப்பது அற்புதத் தருணம்தானே!

IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

சாய் சுதர்சனுக்கு இது சவாலான அறிமுகமாக இருக்கும். இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியிலேயே அறிமுகம் ஆகிறார்.

இந்தப் போட்டியில் அவரின் செயல்பாட்டைப் பொறுத்துதான் அடுத்தடுத்த போட்டிகளில் அவரின் இடம் உறுதி செய்யப்படும்.

கில் ஆடிய நம்பர் 3 இடத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டிய சவால் சாய் சுதர்சனுக்கு இருக்கிறது.

சாய் சுதர்சன் திறமைசாலி. கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் கலக்கியிருக்கிறார். இந்த வாய்ப்பையும் விடாமல் பிடித்துக் கொள்வார் என நம்புவோம்!

Sai Sudharsan: "சாய் சுதர்சனை நாம் இன்னும் கொண்டாடணும்!" - கிரீம் ஸ்மித் ஆதங்கம்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article