Faf du Plessis: "இது கடினமான முடிவு; ஆனால்" - 2026 IPL பற்றி ஷாக் கொடுத்த முன்னாள் CSK எல்லைச்சாமி

4 weeks ago 2
ARTICLE AD BOX

இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆல் டைம் ஃபைன் அண்ட் பெஸ்ட் வெளிநாட்டு வீரர்களில் தவிர்க்க முடியாதவர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்.

2011 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் பென்ச்சிலேயே உட்காரவைக்கப்பட்டவர், 2012-ல் இறங்கி ஆட வாய்ப்பு கிடைத்ததும் அந்த சீசனில் 398 ரன்கள் அடித்து அசத்தினார்.

நல்ல தொடக்கம் கொடுத்தும் காயத்தால் அடுத்த சீசனைத் தவறவிட்ட டு பிளெஸ்ஸிஸ், 2014-ல் கம்பேக் கொடுத்து, அதன்பிறகு சி.எஸ்.கே-வின் தவிர்க்க முடியாத வீரராகவே உருவெடுத்துவிட்டார்.

Dhoni, Faf du Plessis - தோனி, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Dhoni, Faf du Plessis - தோனி, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் - CSK

சூதாட்ட விவகாரத்தால் 2016, 2017 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் தடைக்குள்ளான சி.எஸ்.கே 2018-ல் திரும்பி வந்து சாம்பியன் பட்டம் சொல்லியடித்தது.

அந்த சீசனில், குவாலிஃபயர் 1-ல் ஹைதராபாத் நிர்ணயித்த 140 டார்கெட் நோக்கிய சேஸிங்கில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் ஓப்பனிங்கில் இறங்கியது முதல் கடைசி வரை நின்று வின்னிங் ஷாட் அடித்து இறுதிப் போட்டிக்கு சென்னையை கொண்டுசென்றதை இன்றும் மறக்க முடியாதது.

Ruturaj Gaikwad, Faf du Plessis - ருத்துராஜ் கெய்க்வாட்,  ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Ruturaj Gaikwad, Faf du Plessis - ருத்துராஜ் கெய்க்வாட், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

அதைத்தொடர்ந்து 2021-ல் சி.எஸ்.கே சாம்பியன் பட்டம் வென்றதிலும் இவரின் பங்கு அளப்பரியது.

குறிப்பிட்டுச் சொன்னால் அந்த சீசனில் 635 ரன்கள் அடித்து ஆரஞ்ச் கேப் வென்ற ருத்துராஜ் கெய்க்வாட்டை விட ஜஸ்ட் 2 ரன்கள்தான் டு பிளெஸ்ஸிஸ் குறைவாக அடித்திருந்தார்.

`என் RCB ரசிகர்களுக்கு; சின்னசாமி ஸ்டேடியத்தில்...' - நெகிழ்ந்த டூ பிளெஸ்ஸி

அப்படியிருந்தும் 2022 சீசனில் சென்னையிலிருந்து கழற்றிவிடப்பட்டார். ஆனால் அதே சீசனில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாகி அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றார்.

அதற்கடுத்த சீசனில் டு பிளெஸ்ஸிஸ் தனியாளாகப் போராடி தனது ஐ.பி.எல் கரியரின் பெஸ்ட் சீசனாக 730 ரன்கள் அடித்தார்.

Kohli, Faf du Plessis - கோலி,  ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Kohli, Faf du Plessis - கோலி, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

ஆனால், ஒரு அணியாக ஆர்.சி.பி ஏமாற்றம் தந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

இருப்பினும், அடுத்த சீசனில் கடைசி 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று சி.எஸ்.கே-வை வெளியேற்றி மீண்டும் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

Faf du Plessis -  ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Faf du Plessis - ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

சி.எஸ்.கே-வுக்கெதிரான போட்டியில் மிட்செல் சான்ட்னரின் கேட்ச்சை ஒற்றைக் கையால் அவர் பறந்து பிடித்தது ஐ.பி.எல்லின் பெஸ்ட் கேட்ச் ரகம்.

ஆனாலும் அந்த சீசனிலும் ஆர்.சி.பி-யால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை. அதன்பின்னர் அங்கிருந்தும் கழற்றிவிடப்பட்ட டு பிளெஸ்ஸிஸ் கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சென்றார்.

தண்ணீர் பாட்டில்கள் சுமந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸி!

அங்கு காயத்தால் பாதி சீசனிலேயே வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக, 2026 சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்பு டெல்லி அணியும் அவரைக் கழற்றிவிட்டது.

இந்த நிலையில் டிசம்பர் 16-ம் தேதி துபாயில் ஐ.பி.எல் மினி ஏலம் நடைபெறவிருக்கும் சூழலில், ஏலத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என டு பிளெஸ்ஸிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Preity Zinta, Faf du Plessis -  பிரீத்தி ஜிந்தா, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Preity Zinta, Faf du Plessis - பிரீத்தி ஜிந்தா, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஐ.பி.எல்லில் 14 சீசன்களுக்குப் பிறகு இந்த வருடம் ஏலத்தில் என் பெயரை பதிவு செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். இது கடினமான முடிவு.

என்னுடைய பயணத்தில் மிகப்பெரிய பகுதி ஐ.பி.எல். இங்கே ரசிகர்கள் முன்னிலையில் அற்புதமான அணிகளுடனும், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடனும் விளையாடியதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

இந்தியா எனக்கு நட்பு, பாடங்கள் மற்றும் நிறைய நினைவுகளை கொடுத்திருக்கிறது. அது என்னை ஒரு கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் செதுக்கியது.

என்னை ஆதரித்த ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களின் ஆதரவு மிகப்பெரியது.

ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என்ன கேட்கிறார்?

14 வருடம் என்பது மிக நீண்ட காலம். இதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு.

நிச்சயமாக இதோடு நான் விடைபெறப்போவது இல்லை. நீங்கள் மீண்டும் என்னை பார்ப்பீர்கள்.

புதிய சவாலாக, வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட நான் முடிவெடுத்திருக்கிறேன்.

Faf du Plessis -  ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்Faf du Plessis - ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

இது எனக்கு மிகவும் உற்சாகமான அடுத்த நகர்வு. புதிதாக ஒன்றை அனுபவிக்கவும், ஒரு வீரராக அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இது எனக்கு ஒரு வாய்ப்பு.

புதிய நாடு, புதிய சுற்றுச்சூழல், புதிய சவால். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்" என்று டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.

ஐ.பி.எல்லில் பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளில் ஆடியிருந்தாலும் இன்றும் சென்னை அணியின் எல்லைச் சாமி என ரசிகர்கள் கொண்டாடும் டு பிளெஸ்ஸிஸுக்கு இப்போது 41 வயது, 2027 சீசனில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான். எனினும் அவரின் ஃபிட்னஸ் இந்த வயதிலும் பிரமிக்கத்தக்கதாக இருப்பதால் அவரின் வார்த்தையை நம்பி 2027-ல் அவரை எதிர்பார்ப்போம்!

Ashes: "எங்களை மோசம் என்றுகூட சொல்லுங்கள்; ஆனால் ஆணவம்" - இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்
Read Entire Article