FIDE: 'வரலாற்றுச் சாதனை' - உலக செஸ் சாம்பியன் திவ்யா; வெள்ளி வென்ற கோனேரு; குவியும் வாழ்த்துகள்!

5 months ago 6
ARTICLE AD BOX

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மோதிய திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி இருவரும் இந்தியர்கள்.

இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் திவ்யா தேஷ்முக். அதனால், உலக ரேபிட் சாம்பியன் பட்டத்தை வென்ற கோனேரு ஹம்பிக்கு இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது.

உலக செஸ் சாம்பியன் திவ்யா, வெள்ளி வென்ற கோனேருஉலக செஸ் சாம்பியன் திவ்யா, வெள்ளி வென்ற கோனேரு

மகளிர் செஸ் உலகக் கோப்பையை முதல்முறையாக இந்தியப் பெண் வென்றதும், இரண்டாம் இடத்தைப் பிடித்ததும் இந்தியப் பெண்தான் என்பதும் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக், இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் கோனேரு ஹம்பி இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "ஃபிடே உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் பெண் திவ்யாவிற்கு வாழ்த்துகள்; செஸ் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற கோனேரு ஹம்பிக்கும் வாழ்த்துகள் இந்த வெற்றி நம் நாட்டுப் பெண்களிடம் உள்ள திறமையை உலகிற்குக் காட்டிருக்கிறது" என்று பாராட்டியிருக்கிறார்.

A historic final featuring two outstanding Indian chess players!

Proud of the young Divya Deshmukh on becoming FIDE Women's World Chess Champion 2025. Congratulations to her for this remarkable feat, which will inspire several youngsters.

Koneru Humpy has also displayed… pic.twitter.com/l7fWeA3qLw

— Narendra Modi (@narendramodi) July 28, 2025

பிரதமர் மோடி, "இரண்டு சிறந்த இந்தியச் சதுரங்க வீராங்கனைகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டி. 2025 ஆம் ஆண்டுக்கான FIDE மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் திவ்யா தேஷ்முக்கை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவரின் இந்தச் சாதனை பல இளைஞர்களுக்கு, பெண்களுக்கும் ஊக்கமளிக்கும்.

கோனேரு ஹம்பியும் முழு அர்ப்பணிப்புடன் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இரு வீராங்கனைகளுக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Divya Deshmukh: மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்தார் திவ்யா தேஷ்முக்; இந்தியா சாதனை!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article