ARTICLE AD BOX
'குஜராத் வெற்றி!'
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று அஹமதாபாத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
Gillஇந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய அந்த அணியின் கேப்டன் கில், 'நீங்கள் யாருக்கு ஆட்டநாயகன் விருதை கொடுக்கலாம் என்பதில் குழப்பமடையும் அளவுக்கு எங்கள் அணி சிறப்பாக ஆடியிருக்கிறது.' எனப் பெருமிதமாக பேசியிருக்கிறார்.
'கில் பெருமிதம்!'
கில் பேசியதாவது, 'முதல் 3,4 ஓவர்கள் பேட்டிங் அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்படியும் முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டினோம். அந்த நேரத்தில் பட்லர், சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக ஆடினர். கேப்டனாக, 220 என்ற ஸ்கோரை எந்த நாளும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து போட்டியை முடித்து வைத்தனர்.
Gillயாருக்கு ஆட்டநாயகன் விருதைக் கொடுப்பது என்பதைத் தேர்வு செய்வதில் உங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எங்கள் அணி வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒரு சிறந்த அணிக்கு இதுதான் ஹால்மார்க். எங்கள் வீரர்கள் அனைவருமே தேவையான பங்களிப்பை அளித்து வருகின்றனர். ரஷீத் போன்ற பந்துவீச்சாளர்களை நீங்கள் வைத்திருக்கும்போது, கேப்டனாக உங்கள் வேலை மிகவும் எளிதாகிவிடும்." என்றார்.
'சீனியர் வீரர்கள் உங்களை Bully செய்வார்களா?' என்ற கேள்விக்கு 'இல்லை, இல்லை. அனைவருமே என்னிடம் நன்றாக, பரிவுடன் பழகுகிறார்கள்' என்றார்.
PBKS vs CSK Review: What’s Wrong with CSK? Detailed Analysis with Commentator Muthu
8 months ago
8







English (US) ·