GT vs DC: ஸ்டார்க்கை டார்கெட் செய்த பட்லர்; 203 அடித்தும் தோற்ற டெல்லி; மேட்சை மாற்றிய அந்த ஒரு ஓவர்

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் டெல்லி அணியும், மூன்றாமிடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறும் வேகத்தில் குஜராத் அணியும் நேருக்கு நேர் அகமதாபாத் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 19) களமிறங்கின.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். டெல்லி அணியில் ஃப்ரேஸர் மெக்கர்க் கழற்றிவிடப்பட்டதால் அபிஷேக் போரலும், கருண் நாயரும் ஓப்பனிங் இறங்கினார்.

சுப்மன் கில் - அக்சர் படேல்சுப்மன் கில் - அக்சர் படேல்

பவர்பிளேயில் அதிரடி காட்டிய டெல்லி!

இந்த சீசனில் சிறப்பாகப் பந்துவீசி வரும் முகமது சிராஜை முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என 16 ரன்கள் அடித்து வேகம் காட்டினார் இளம் வீரர் அபிஷேக் போரல். ஆனால், அர்ஷத் கான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஃபுல் டாஸ் பந்தை வேகமாக அடிக்க முயன்று 18 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கி, 3, 4 ஆகிய ஓவர்களில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல், பிரசித் கிருஷ்ணா வீசிய 5-வது ஓவரில் பயங்கரமான யார்க்கர் பந்துக்கு எல்.பி.டபிள்யு முறையில் இரையாகி 28 ரன்களில் வெளியேறினார்.

கே.எல்.ராகுல் - கருண் நாயர்கே.எல்.ராகுல் - கருண் நாயர்

அதையடுத்து, கருண் நாயருடன் கேப்டன் அக்சர் படேல் கைகோத்தார். ஒருபக்கம், விக்கெட் விழுந்துகொண்டே இருந்தாலும் டெல்லியின் ரன்ரேட் மட்டும் குறையவில்லை. ராகுல் வெளியேறியதும் தனது ஆட்டத்தை ஆக்சிலரேட் செய்த கருண் நாயர், பவர்பிளே கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், பவுண்டரி என அதிரடி காட்ட, 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் குவித்தது டெல்லி.

10-க்கு கீழ் குறையாத டெல்லியின் ரன்ரேட்!

பவர்பிளே முடிந்த பிறகு இரண்டு ஓவர்களாக நிதானமாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை, 8-வது ஓவரில் கருண் நாயரை 31 ரன்களில் விக்கெட் எடுத்து உடைத்தார் பிரசித் கிருஷ்ணா. ஆனால், அந்த விக்கெட்டுக்குப் பிறகு இணைந்த அக்சர் - ஸ்டப்ஸ் கூட்டணி நிதானமாகவும், தேவைக்கேற்ப அதிரடியாகவும் என 6 ஓவர்களுக்கு விக்கெட் விடாமல் 50 ரன் பார்ட்னர்ஷிப் போட்டது.

குஜராத் டைட்டன்ஸ்குஜராத் டைட்டன்ஸ்

14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 10 ரன்ரேட்டில் 146 ரன்களுடன் நல்ல நிலைமையில் இருந்த டெல்லிக்கு, ஸ்ட்ரேட்டஜிக் டைம்அவுட் முடிந்த அடுத்த ஓவரில் (15) ஸ்டப்ஸை 31 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் சிராஜ். அதே ஓவரில், 150 ரன்களையும் தொட்டது டெல்லி. டெல்லியின் ரன்ரேட்டும் குறையவில்லை. அந்த வேலையை, அஷுதோஷ் சர்மா கட்சிதமாகச் செய்தார்.

ஒரு அரைசதம் கூட இல்லாமல் 200 ரன்களைக் கடந்த டெல்லி!

16, 17 ஆகிய ஓவர்களில் அஷுதோஷ் அதிரடியால் மொத்தமாக 23 ரன்கள் வந்தது. இந்த நேரத்தில்தான் மீண்டும் குறுக்கே வந்த பிரசித் கிருஷ்ணா, 18-வது ஓவரில் அக்சர் படேலை 39 ரன்களிலும், விப்ரஜ் நிகாமை 0 ரன்னிலும் அடுத்து அவுட்டாக்கினார். ஆனால், அஷுதோஷ் சர்மா அதே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அக்சர் படேல்அக்சர் படேல்

அடுத்து இஷாந்த் சர்மாவின் 19-வது ஓவரில் ஒரு விக்கெட்டும், சாய் கிஷோர் வீசிய கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வந்தாலும், முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க 203 ரன்களைக் குவித்தது டெல்லி. குஜராத் அணியில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்க, மறுபக்கம் டெல்லியில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களை அடித்திருந்தார்.

விக்கெட் எடுக்கத் திணறிய டெல்லி!

முன்னாள் சாம்பியனாக நான்காவது வருடமாக ஐ.பி.எல்லில் ஆடிவரும் குஜராத், இதுவரை ஒருமுறைகூட 200 ரன்களுக்கு மேற்பட்ட டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை என்ற ஸ்டேடஸ்ட்டிக்ஸ் எல்லோருக்கும் சற்று சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்தது டெல்லி. அதற்கேற்றாற்போல, இரண்டாவது ஓவரிலேயே சுப்மன் கில்லை கருண் நாயர் ரன் அவுட் ஆக்கினார்.

சாய் சுதர்சன்சாய் சுதர்சன்

ஆனால், அடுத்துவந்த ஜோஸ் பட்லர், எதற்காக அந்த ரன் அவுட்டை எடுத்தோம் என அடுத்த சில ஓவர்களிலேயே டெல்லியைப் புலம்பவைத்தார். இரண்டு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்களில் இருந்தது குஜராத். அங்கு வேகமெடுத்த சாய் சுதர்ஷன் - பட்லர் கூட்டணி, டெல்லியின் பந்துவீச்சை பவுண்டரியும், சிக்ஸருமாக நாலாபுறமும் சிதறடித்து பவர்பிளேயிலேயே 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

குல்தீப் யாதவ்குல்தீப் யாதவ்

பவர்பிளே முடிவில் 10+ ரன்ரேட்டில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்தது குஜராத். இந்த பார்ட்னர்ஷிப் மேலும் தொடர்ந்தால் டேஞ்சர்தான் என்று உணர்ந்த கேப்டன் அக்சர், தனது ஆஸ்தான ஸ்பின்னர் குல்தீப் கையில் பந்தை ஒப்படைத்தார். அதற்கு கைமேல் பலனாக, அவர் வீசிய 8-வது ஓவரில் சாய் சுதர்சன் விக்கெட் எடுத்துக் கொடுத்தார் குல்தீப்.

Sai Sudharsan :'ஐ.பி.எல் தொடரில் அந்த ஒரு விஷயம் ரொம்பவே முக்கியம்!- சாய் சுதர்சன் சொல்லும் சீக்ரெட்

அதிரடி காட்டிய ரூதர்ஃபோர்ட்... ஸ்டார்க்கை கதறவிட்ட பட்லர்!

சாய் சுதர்சன் விக்கெட் போன பிறகுதான் உண்மையான அதிரடி ஆட்டமே ஆரம்பித்தது. பட்லருடன் இம்பேக் பிளேயர் ரூதர்ஃபோர்ட் கைகோத்தார். இந்தக் கூட்டணி அவ்வப்போது பவுண்டரி அடித்து 12-வது ஓவர் வரை நிதானத்தை மட்டுமே வெளிப்படுத்தியது.

Sherfane goes Ruthless with the bat!

Back-to-back sixes from him to make a loud and clear Impact! #TATAIPL | #GTvDC | @gujarat_titans pic.twitter.com/CF1CaQnuIw

— IndianPremierLeague (@IPL) April 19, 2025

சரியான ஓவருக்காகக் காத்திருந்த ரூதர்ஃபோர்ட், மோஹித் சர்மா வீசிய 13-வது ஓவரை பேக் டு பேக் சிக்ஸருடன் வரவேற்று அதிரடியைத் தொடங்கிவைத்தார். அதே ஓவரில் பட்லர் பவுண்டரி அடித்து அரைசதம் கடக்க, இந்தப் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தொட்டது. இந்த சமயத்தில் டெல்லிக்கு விக்கெட் தேவைப்படவே, 15-வது ஓவரை வீசவந்தார் கடந்த போட்டியின் நாயகன் ஸ்டார்க்.

ஜோஸ் பட்லர்ஜோஸ் பட்லர்

ஆனால், பந்துவீசுவது யார் என்றெல்லாம் கண்டுகொள்ளாத பட்லர், தொடர்ச்சியாக 5 பந்துகளை பவுண்டரி அடித்து வெற்றியை குஜராத் பக்கம் திரும்பிவிட்டார். 15 ஒவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்த குஜராத்துக்கு அடுத்த 30 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

Tim David: தோற்றாலும் ஆட்டநாயகன்; கோலியை முந்தி டிம் டேவிட் சாதனை; RCB படைத்த சோதனையான சாதனை என்ன?

பதறாமல் ஆட்டத்தை முடித்த ராகுல் திவாதியா!

அடுத்த மூன்று ஓவர்களில் விக்கெட் எதுவும் விடாமல் கேஷுவலாக 31 ரன்களைக் எடுத்து பார்ட்னாஷிப்பில் 100 ரங்களைத் தொட்டது இந்த ஜோடி. குஜராத்தின் வெற்றிக்கு 12 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற சூழலில் 19-வது ஓவரை வீசிய முகேஷ் குமார், குஜராத்துக்கு ஷாக் தரும் வகையில் ரூதர்ஃபோர்ட் அவுட்டாக்கி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். குஜராத்துக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை. பந்தைக் கையிலெடுத்தார் ஸ்டார்க். பட்லரோ பவுலர் எண்டில் நின்றுகொண்டிருந்தார்.

 ராகுல் திவாதியா ராகுல் திவாதியா

எங்கு இந்த முறையும் 200+ டார்கெட்டை சேஸ் செய்ய முடியாதோ என்று குஜராத் ரசிகர்கள் பதட்டத்தில் இருக்க, கிரீஸிலிருந்த ராகுல் திவாதியா எந்த சலனமும் இல்லாமல், ஸ்டார்க் வீசிய முதல் இரண்டு பந்துகளிலேயே சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டார். குஜராத்தின் இந்தச் சாதனை வெற்றிக்கு அடித்தளமிட்டு, 97 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

RCB vs PBKS Review: RCB's Chinnswamy Curse Continues | Commentator Muthu Interview
Read Entire Article