GT vs LSG : `பிளே ஆஃப்-க்குள் வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்' - தோல்விக்குப் பின் கில்

7 months ago 8
ARTICLE AD BOX

நடப்பு ஐ.பி.எல் சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில் இருக்கும் லக்னோவும் அகமதாபாத்தில் நேற்று (மே 22) களமிறங்கின.

குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

GT vs LSGGT vs LSG

தொடர்ந்து சேஸிங் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால், 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிபெற்றது.

சதமடித்த மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

`பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறது’

தோல்விக்குப் பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், "15 - 20 ரன்களை நாங்கள் அதிகமாகக் கொடுத்துவிட்டோம். அவர்களை 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம்.

210-க்கும் 230-க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பவர்பிளேயில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். விக்கெட்டுகள்தான் எடுக்கவில்லை.

ஆனால், அடுத்த 14 ஒவர்களில் அவர்கள் 180 ரன்கள் எடுத்தனர். அது அதிகம்தான்.

கில்கில்

சேஸிங்கில் 17-வது ஓவர் வரை நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம். இருப்பினும், 240 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் சுலபமல்ல.

இருப்பினும் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறது. ரூதர்ஃபோர்ட் - ஷாருக்கான் பேட்டிங் எங்களுக்கு பெரிய ப்ளஸ்.

மீண்டும் கொஞ்சம் வேகமெடுப்பது முக்கியம். பிளேஆஃப்-க்குள் வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

IPL : விக்கெட்டில் செஞ்சுரி போட்ட குல்தீப்; 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மற்ற ஸ்பின்னர்கள் யார் யார்?
Read Entire Article