GT vs MI : 'எங்க பேட்டர்ஸ்தான் சொதப்புறாங்க..' - தோல்விக்கு ஹர்திக் விளக்கம்

8 months ago 9
ARTICLE AD BOX

'மும்பை தோல்வி!'

அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது.

GT vs MIGT vs MI

நடப்பு சீசனின் முதல் இரண்டு போட்டிகளிலுமே மும்பை அணி தோற்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'ஹர்திக் விளக்கம்!'

அவர் பேசியதாவது, 'நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை கணித்து சொல்ல கடினமாக இருக்கிறது. நிறைய தவறுகளை செய்தோம் என நினைக்கிறோம். தொழில்முறை வீரர்களாக நிறைவான ஆட்டத்தை நாங்கள் கொடுக்கவில்லை. சுமாராகத்தான் பீல்டிங் செய்தோம். அதனாலேயே 20-25 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம்.

Hardik Pandya l Hardik Pandya

பவர்ப்ளேயில் அவர்கள் மிகச்சிறப்பாக ஆடிவிட்டார்கள். அதிகம் ரிஸ்க் எடுக்காமல் லாவகமான ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார்கள். அது எங்களுக்கு பின்னடைவை கொடுத்தது. ஆட்டம் முழுமைக்கும் நாங்கள் அவர்களை விரட்டிக் கொண்டேதான் இருந்தோம். ஆதிக்கமாகவே செயல்படவில்லை. எங்களின் அணியின் பேட்டர்கள் சீக்கிரமே சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

CSK vs RCB: "அந்த 6 ஓவர்லதான் எல்லாம் மாறுச்சு" - வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதர்

நான் கொஞ்சம் அதிகமாகவே ஸ்லோயர் டெலிவரிக்களை வீசினேன். அந்த வகை பந்துகள்தான் பேட்டர்களுக்கு அடித்து ஆட சிரமமாக இருந்தது. நான் எப்படி பந்து வீசினேனோ அதேமாதிரியே அவர்களும் எங்களுக்கு வீசினார்கள்.' என்றார்.

Read Entire Article