Gukesh - Magnus Carlsen: சாதனையைத் தவறவிட்ட குகேஷ்; 1.5 புள்ளி வித்தியாசத்தில் கார்ல்சன் சாம்பியன்!

6 months ago 7
ARTICLE AD BOX

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், முதல் நாளில் கார்ல்சன், குகேஷ் நேருக்குநேர் மோதிய முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார்.

Magnus Carlsen vs GukeshMagnus Carlsen vs Gukesh

அதைத்தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி இருவருக்குமிடையே நடைபெற்ற ஆறாவது சுற்றில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.

குகேஷிடம் முதல்முறையாகத் தோற்ற விரக்தியில் செஸ் டேபிளில் கார்ல்சன் கையால் குத்திய சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், இத்தொடரின் இறுதிச்சுற்றுகள் நேற்று நடைபெற்றன.

இதில், குகேஷ் தனது இறுதிச்சுற்றில் 2018-ம் ஆண்டு நார்வே செஸ் தொடர் சாம்பியன் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.

மறுபக்கம், கார்ல்சன் தனது இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டார்.

Khel Ratna: குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

பரபரப்பாக நடந்த இறுதிச்சுற்றுகளில், கருவானாவிடம் குகேஷ் தோல்வியடைய, மறுமுனையில், அர்ஜுன் எரிகைசி vs கார்ல்சன் சுற்று டிரா ஆனது. இதனால், 16.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 7-வது முறையாக நார்வே செஸ் தொடரின் சாம்பியனானார் கார்ல்சன்.

The 2025 Norway Chess and Norway Chess Women tournaments have officially come to an end!

In the Open:
1st: Magnus Carlsen – 16 points
2nd: Fabiano Caruana – 15.5 points
3rd: Gukesh Dommaraju – 14.5 points
4th: Hikaru Nakamura – 14 points
5th: Arjun Erigaisi – 13 points… pic.twitter.com/TK4gJjdG0J

— Norway Chess (@NorwayChess) June 6, 2025

ஒருவேளை, குகேஷ் தனது இறுதிச்சுற்றில் கருவானாவை வீழ்த்தியிருந்தால் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பார்.

தோல்வியடைந்ததால் 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். இவரை வீழ்த்திய கருவானா 15.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி மூன்றாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gukesh vs Magnus Carlsen: குகேஷிடம் முதல்முறையாகத் தோல்வி - ஏமாற்றத்தில் மேஜையில் குத்திய கார்ல்சன்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article