Hardik Pandya: "நான் டாஸ் போடும்போது எனக்காக நீங்கள்..." - ரசிகர்களிடம் ஹர்திக் வைத்த கோரிக்கை

9 months ago 9
ARTICLE AD BOX

18-வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. இதில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை அணியை முதல் போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் ஹர்திக் பாண்டியா வழிநடத்த இருக்கிறார். கடந்த முறை மும்பை நிர்வாகம் ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஹர்திக்கை நியமித்ததால் ரசிகர்கள் மத்தியில் ஹர்திக்கிற்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன.

ஹர்திக் பாண்டியா

குறிப்பாக டாஸ் போட வரும்போது மும்பை ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு ஹர்திக் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். "இந்த முறை பேட்டிங் செய்யும் போது, சிக்ஸ் அடிக்கும் போது, டாஸ் போடும்போது எனக்காக ஆரவாரம் செய்து ஆதரவு கொடுங்கள்.

வான்கடே மைதானத்தில் நமது அணியின் வண்ணத்தைத் தவிர்த்து மற்ற அணியின் ஜெர்சிகளை நான் பார்க்க விரும்பவில்லை. இது தான் மும்பை ரசிகர்களிடம் இருந்து என்னுடைய விருப்பம். கடந்த வருடம் கடினமாக இருந்தாலும் பொழுதுபோக்காகவும் இருந்தது.

ஹர்திக் பாண்டியா

என்னை நான் எப்போதும் மும்பை அணியின் முக்கிய வீரராகவே கருதுகிறேன். எனது ஆல் ரவுண்ட் திறன்களை வெளிப்படுத்தினால் அது மும்பை வெற்றிக்கு உதவும்" என்று தெரிவித்திருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article