ICC Women's World Cup: 169 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்; இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா!

1 month ago 3
ARTICLE AD BOX

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குவாஹாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் சரியான இடைவெளியில் பவுண்டரிகளுடன் 23வது ஓவர் வரை விக்கெட் இழக்காமல் 116 ரன்கள் சேர்த்தனர்.

லாரா வோல்வார்ட்லாரா வோல்வார்ட்

அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் விழ, லாரா உடன் மாரிசேன் காப் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சீரான வேகத்தில் ரன்கள் சேர 36.3 ஓவரில் விக்கெட்டை 42 அடித்திருந்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அடுத்ததாக பெரிய பார்ட்னர்ஷிப்கள் அமையாதபோதும், அதிரடியாக விளையாடி 4 சிக்சர்கள், 20 பவுண்டரிகளுடன் 143 பந்துகளில் 169 ரன்கள் குவித்தார் லாரா வோல்வார்ட். இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சொதப்பலாக மரிசான் காப்பின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து, 1.1 ஓவரில் வெறும் 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிந்துவிட்டதாக நினைக்கும்போது, கேப்டன் நாட் ஸ்கிவர் மற்றும் ஆலிஸ் காப்ஸே கூட்டணி அமைத்தனர். 22.5 ஓவரில் அரைசதம் அடித்திருந்த காப்ஸே விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

மரிசேன் காப்மரிசேன் காப்

64 ரன்களில் ஸ்கிவரும் மரிசான் காப்பின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால், வெற்றிக்கு வழியே இல்லாமல் தவித்தது இங்கிலாந்து அணி.

மரிசான் காப்பின் 31வது ஓவரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகள் சோபியா டங்க்லி மற்றும் சார்லி டீன் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். 42.3 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

169 ரன்கள் அடித்து, 320 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்கவும் இங்கிலாந்து பேட்டர்கள்மீது அழுத்தம் கொடுக்கவும் வழிவகுத்த லாரா வோல்வார்ட் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.

இளம் வீராங்கனை லாரா வோல்வார்டின் அதிரடியான பேட்டிங்கும், மரிசான் காப்பின் அனுபவமிக்க பந்துவீச்சும் சேர்ந்து, தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கிறது தென்னாப்பிரிக்கா!

IND vs PAK: கைகொடுக்காமல் வந்த ஹர்மன்பிரீத்; இடையில் நிறுத்தப்பட்ட போட்டி - வெற்றியை நோக்கி இந்தியா
Read Entire Article