IFFI: "'நான் கமல் ஹாசனின் அண்ணன் மகள் என்பதை மறக்காதீர்கள்!' என்றேன்" - சிரஞ்சீவி குறித்து சுஹாசினி

4 weeks ago 2
ARTICLE AD BOX

கோவாவில் நடைபெற்று வந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. திரைப்படத் திரையிடல்கள், கலந்துரையாடல்கள், விருது நிகழ்வுகள் எனப் பல நிகழ்வுகள் இத்திரைப்பட விழாவில் நடைபெற்றன.

இந்தத் திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடந்த கலந்துரையாடலில் பேசிய நடிகை சுஹாசினி, நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்தது குறித்துப் பேசியிருக்கிறார்.

சிரஞ்சீவியின் படத்தில் கதாநாயகியாக நடித்த அனுபவத்தை அதில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

சுஹாசினிசுஹாசினி

சுஹாசினி பேசுகையில், "நான் ஆரம்பத்தில் உதவி ஒளிப்பதிவாளராகத்தான் பணியாற்றி வந்தேன். நடிப்பிற்காக நான் எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை.

அதனால் எல்லாவற்றையும் பயிற்சி செய்துதான் படிப்படியாகக் கற்றுக்கொண்டேன்" என்றவர் சிரஞ்சீவியின் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசும்போது, "அந்தப் படத்தில் ஒரு காட்சிக்காக, நாற்காலிக்குப் பின்னால் நின்றுகொண்டு, எதுவும் பேசாமல் ரியாக்ஷன்களைக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

பேசாமல் நடிக்கும் காட்சியை எப்படி உயிர்ப்பிக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. அப்படிப்பட்ட தருணங்களில்தான் சிரஞ்சீவி என் நடிப்பை மெருகேற்றுவதற்கு உதவினார்.

அந்தக் காட்சியில் நான் எவ்வளவு முக்கியமானவள் என்பதை அவர் உணர்த்தினார். அப்போது அவர் திடீரென்று என்னைப் பார்த்து, ‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான், ‘நடிக்கிறேன்’ என்றேன்.

உடனே அவர், ‘நீங்கள்தான் இந்தப் படத்தின் ஹீரோயின்; ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லை’ என்றார். கமர்ஷியல் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வெறும் ரியாக்ஷன் கொடுக்க மட்டுமே பழக்கப்படுத்துவார்கள்.

ஆனால் அந்தக் கதாபாத்திரத்திலும் அவர் என்னை கதாநாயகியைப் போல நடிக்கச் சொன்னார். நான் நடிகையாக மாறிய பிறகு சிரஞ்சீவியுடன் என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தேன்.

SuhasiniSuhasini

அப்போது சிரஞ்சீவி என்னை உற்றுப் பார்ப்பதை உணர ஆரம்பித்தேன். முன்பு உதவி ஒளிப்பதிவாளராக ரிஃப்ளெக்டரைப் பிடித்துக்கொண்டிருந்த என்னைத்தான் அவர் அறிந்திருந்தார். அப்போது நான் அவர் முன்பு கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் அவருக்கே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது (நகைச்சுவையாக). ரிஹர்சிலின் போது அவர் என்னிடம், ‘திடீரென்று என்னைப் பார்க்கக் கூடாது. சாதாரணமாகப் பார்த்து டயலாக் பேச வேண்டும்’ என்றார்.

அதற்கு நான், 'கமல்ஹாசனின் அண்ணன் மகள் நான். நடிகர்கள் சூழ்ந்துதான் வளர்ந்திருக்கிறே்ன். மறந்துவிடாதீர்கள்’ என்று நினைவூட்டினேன். இயல்பாகவே அந்தக் காட்சியை நடித்தேன். இறுதியில் அவரின் பாராட்டையும் பெற்றேன்" என்றார்.

மூத்த பிள்ளை கமல், அன்பு மகன் மணிரத்னம், நாட்டாமை சுஹாசினி, ஆனந்தம் விளையாடும் சாருஹாசன் குடும்பம்!
Read Entire Article