Ilaiyaraja: "கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது" - பகிர்கிறார் இளையராஜா

6 months ago 8
ARTICLE AD BOX

இசையமைப்பாளர் இளையராஜாவின் கான்சர்ட் நாளை கோவையில் நடக்கவிருக்கிறது.

அதற்காக கோவைக்கு விரைந்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தினம் கோவையில் ரோட்டரி கிளப் நடத்தும் விருது விழா நடைபெற்றது.

இளையராஜாஇளையராஜா

இந்த நிகழ்வில் இசைத்துறைக்கு இளையராஜா ஆற்றியிருக்கும் பங்களிப்பை பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் தனக்கும் கோவைக்குமான உறவு குறித்துப் பேசியிருக்கிறார்.

இளையராஜா பேசுகையில், "கோவையில் என்னுடைய காலடி படாத இடமே கிடையாது. கோவையில் என் ஹார்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது.

நான் பார்த்த கோவை வேறு. என்னுடைய ஹார்மோனியம் கோவையில் செய்யப்பட்டதுதான். இங்கிருந்து நான் வாங்கிய ஹார்மோனியத்தைதான் இன்றும் இசையமைக்கப் பயன்படுத்துகிறேன்.

கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு எனச் சொல்லமுடியாது.

இளையராஜாஇளையராஜா

ஆனால், கோவையையும் என்னையும் பிரிக்க முடியாது. பேசுவதற்கு நான் பேச்சாளன் இல்லை.

நான் பாட்டாளி. பாட்டாளி என்றால் பாட்டுப் பாடுபவன். உழைக்கும் மக்கள் பாடும் பாட்டில் இருக்கும் பாட்டாளி நான். அவர்கள் படும் பாடு வேறு, அவர்கள் பாடு வேறு. என் பாடு பாட்டு," எனப் பேசினார்.

Read Entire Article