Ilaiyaraja: `மோடி, கலைஞர், ஸ்டாலின் என அனைவரும் அன்பு செலுத்தும் தலைவர் இளையராஜா' -அண்ணாமலை புகழாரம்

6 months ago 7
ARTICLE AD BOX

இளையராஜாவின் இசைக் கச்சேரி (Truly Live in Concert) நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது.

கடந்த ஜூன் 6-ம் தேதி இந்தக் கச்சேரிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்கேற்ற இளையராஜா, "கோவையில் என்னுடைய காலடி படாத இடமே கிடையாது. கோவையில் என் ஹார்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது. நான் பார்த்த கோவை வேறு.

என்னுடைய ஹார்மோனியம் கோவையில் செய்யப்பட்டதுதான். இங்கிருந்து நான் வாங்கிய ஹார்மோனியத்தைத் தான் இன்றும் இசையமைக்கப் பயன்படுத்துகிறேன்," எனப் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கோவையில் இளையராஜாவைச் சந்தித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் திரு. இளையராஜா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்காலத் தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது," எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து இளையராஜாவின் கச்சேரியிலும் அண்ணாமலை பங்கேற்றிருக்கிறார்.

annamalaiannamalai

அங்கு பேசிய அண்ணாமலை, "இசைஞானி இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் கேட்பதற்கு 17 ஆண்டுகள் ஆகும்.

நம் மகிழ்ச்சி, துக்கம், தூக்கம் என அனைத்துத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் நிறைந்திருக்கும்.

பிரதமர் மோடி, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்தும் ஒரே தலைவர் இளையராஜாதான்," எனத் தெரிவித்தார்.

கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் திரு. @ilaiyaraaja அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக… pic.twitter.com/THJogfakQv

— K.Annamalai (@annamalai_k) June 7, 2025
Ilaiyaraja: "கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது" - பகிர்கிறார் இளையராஜா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article