ARTICLE AD BOX
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இன்று மோதுகின்றன. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐசிசி நாக்அவுட் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இதில், இந்திய அணியின் கோர் டீம் அப்படியே இருந்தாலும், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மேஜர் மிஸ்ஸிங்.
ஸ்டீவ் ஸ்மித் - ரோஹித் சர்மாஆனாலும், இந்த அணியை ஆஸ்திரேலியா B டீம் என்று அசால்ட்டாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தனது அணியை அரையிறுதிக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்க ளை அமைதிப்படுத்துவேன் என்று பேட் கம்மின்ஸ் கூறியது போல, இப்போது தாங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா என்று பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஸ்மித் பதிலளித்திருக்கிறார்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியின் வரலாறும்; ரோஹித்தின் எதிர்காலமும்- அரையிறுதியில் என்ன நடக்கப்போகிறது?போட்டிக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்மித், ``உண்மையில் அவ்வாறு சொல்வதற்கு என்னிடம் எந்த செய்தியுமில்லை. ஆனால், நல்ல விளையாட்டை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் வீரர்களை வழிநடத்துவது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இருப்பினும், எங்கள் முதல் நோக்கம் அரையிறுதிக்கு முன்னேறுவதாகத்தான் இருந்தது. அதை நாங்கள் செய்துவிட்டோம். ஒரு நல்ல இந்திய அணியை எதிர்கொள்ளப்போகிறோம். எனவே, சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித்மேலும், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதமாக இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``சாதகமா என்று கேட்டால் ஒருவேளை இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படித் தெரியவில்லை. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இங்கு விளையாடியிருக்கிறது. எனவே, பிட்சின் தன்மை எப்படி செயல்படுகிறது என்று அவர்களுக்குத் தெரியும். பிட்ச் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இந்தியா சிறப்பாக விளையாடியிருக்கிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். நாங்கள் அதையே எதிர்நோக்குகிறோம்." என்று கூறினார்.
IND Vs AUS: ``முதலில் அவரைக் கண்டு பயப்படாதீர்கள்" - ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஹர்பஜன் தரும் `3' ஐடியாஸ்
9 months ago
8







English (US) ·