ARTICLE AD BOX
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
India Women's team127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இறுதிபோட்டிக்கு முன்னேறிய மகளிர் அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் விராட் கோலியை பாராட்டி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை எதிர்த்து நம் அணியினர் அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.
இந்திய பெண்கள் அணி ஒரு அற்புதமான சேஸை நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
India Women's teamமுக்கியமான பெரிய ஆட்டத்தில் ஜெமிமா தன்னிகரில்லா ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர்களின் ஆட்டத்தில் தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் காண முடிந்தது. வெல்டன் டீம் இந்தியா!
What a victory by our team over a mighty opponent like Australia. A great chase by the girls and a standout performance by Jemimah in a big game. A true display of resilience, belief, and passion. Well done, Team India!
— Virat Kohli (@imVkohli) October 31, 2025
1 month ago
3







English (US) ·