IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

6 months ago 7
ARTICLE AD BOX

Mஇங்கிலாந்தில் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவிருக்கும் இளம் இந்திய அணிக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணியின் பக்க பலமாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய மூத்த வீரர்கள் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர்.

சுப்மன் கில் தலைமையில் ரிஷப் பண்ட் அவருக்கு துணையாக இருக்க, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலந்து அணிக்கு எதிராக களம் காண்கிறது இளம் படை.

Team IndiaTeam India

இந்திய அணி 2007ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றிராத சூழலில், சச்சின் சுப்மன் கில் மற்றும் அவரது குழுவுக்கு தன் ஞானத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அந்த 3 விஷயங்கள்!

வானிலை (overhead conditions), காற்றின் தரம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து வீரர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சச்சின்.

"இங்கிலாந்தில் விளையாடும்போது நீங்கள் எப்போதும் இந்த 3 விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். முதலாவது மேல்நிலை நிலமைகள் ((overhead conditions - வானிலை), இரண்டாவது காற்றின் தரம் மற்றும் மூன்றாவது ஆடுகளத்தின் (பிட்ச்) தன்மை.

Indian PlayersIndian Players

இவை ஒவ்வொன்றும் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதைத் பாதிக்கும் காரணிகள். ஆடுகளத்தில் ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஷாட்ஸ் ஆடுவதே கடினமானதாக இருக்கும். அப்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அந்த கட்டத்தை அடையாளம் காண வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

"பந்துகளை விடுவது தற்காப்பு அல்ல"

மேலும் அவர் பந்துகளை அடிக்காமல் விடுவது தற்காப்பு நடவடிக்கை அல்ல என்றும் அது பேட்ஸ்மேனின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். சூரியன் வெளியே வந்ததும் அதிக ரன்கள் அடிக்க முடியும் என பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.

"பந்துகளை விடுவது தற்காப்பு நடவடிக்கை அல்ல. அது பந்துகளை சரியாக விடவும் தக்க நேரத்தில் அடிக்கவும் முடியும் என்ற நோக்கத்தைக் காட்டுகிறது. சூரியன் நன்றாக வெளியே வந்தது அது அடித்து விளையாட அழகான மைதானமாக மாறும். அப்போது பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்களை அடிக்க முடியும்." என ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளை, ஜூன் 20ம் தேதி இந்தியா - இங்கிலந்து இடையே டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன.

Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?
Read Entire Article