ARTICLE AD BOX
இந்தியாவும், நியூசிலாந்தும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இன்று மோதுகின்றன. கடைசியாக இந்த இரு அணிகளும் இதேபோன்று 2000-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அதில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை, ஸ்டீபன் ஃபிளெமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
Stephen Fleming | ஸ்டீபன் ஃப்ளெமிங்இதனால், இன்றைய போட்டியில் போட்டி இந்தியா வென்று அன்றைய தோல்விக்கு பழிதீர்க்குமா அல்லது மீண்டும் நியூசிலாந்து அணியே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அத்தகைய வெற்றி பெற முயற்சிப்பது மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து வீரர் வில் யங் கூறியிருக்கிறார்.
CT Unfair Advantage: ``ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்..." - விமர்சனங்களுக்கு புஜாரா பதிலடிஇறுதிப்போட்டி குறித்து பேசிய வில் யங், ``அப்போது எனக்கு 8 வயது. கிரிக்கெட்டை நான் காதலிக்க ஆரம்பித்த சமயம் அது. இப்போது, 25 ஆண்டுளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாதனையை (2000 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி) நிகழ்த்த முயற்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தத் தொடரில் நியூசிலாந்து வெற்றிபெற்றதைப் பார்க்க அருமையாக இருந்தது.
வில் யங்தற்போது, நாங்கள் இங்கு வருவதற்கு முன்பு, எங்களின் சாம்பியன்ஸ் டிராபி அணியை நாங்கள் வெளியிட்டோம். அப்போது, உடனிருந்த ஸ்காட் ஸ்டைரிஸ் (2000 சாம்பியன்ஸ் டிராபி நியூசிலாந்து அணியில் இருந்தவர்), அந்த நாள்களில் நியூசிலாந்து ஆடிய போட்டிகளைப் பற்றி கூறினார். எனவே, அவர்களைப் போல இம்முறை வெற்றிபெறுவோம் என்று நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.
IND vs NZ : வெதர் எப்படி இருக்கிறது; வெற்றியைத் தீர்மானிக்கப்போவது எது?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·