ARTICLE AD BOX
பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது.
Rohit Sharma2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, ``ஒரு ஐ.சி.சி தொடரை வெல்வது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம்தான். எனக்கு இன்னமும் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நியாபகமிருக்கிறது. அப்போது எங்களால் வெற்றிகரமாக போட்டியை முடிக்க முடியவில்லை. இன்று அதை செய்ததில் மகிழ்ச்சி. கே.எல்.ராகுல் ஆடிய விதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர் அதீத திறன் படைத்தவர். அவர் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா எனத் தெரியவில்லை." என்றார்.
வருண் சக்ரவர்த்தி வருண் சக்ரவர்த்தி, ``என்னை திடீரென்றுதான் அணியில் எடுத்தார்கள். நானே எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்ஸில் பந்து அவ்வளவாக ஸ்பின் ஆகவில்லை. அதனால் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசினேன்." என்றார். கோப்பையை வென்றது குறித்து நெகிழ்ந்துப் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ``என்னுடைய முதல் ஐ.சி.சி கோப்பை வெற்றி இது. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினோம். இதே மாதிரியான சூழல்களில் ஆடுவதை எப்போதும் விரும்புவேன்." எனக் கூறினார்.

9 months ago
9







English (US) ·