Ind vs Pak: "இப்போதைக்கு ஏற்றுக் கொள்வது சற்று கடினம்தான்" - தோல்விக்குப் பின் பாக்., கேப்டன்

2 months ago 4
ARTICLE AD BOX

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதியது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஓப்பனர்கள் ஃபர்கான் (57), ஃபக்கர் ஜமாம் (46) நல்ல அடித்தளம் கொடுத்தும் 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்.

இந்திய வீரர்கள்இந்திய வீரர்கள்

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்தியா அணியில் 20 ரன்களுக்குள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் காலி.

இந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

அவருக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பின்னர், தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, "இப்போதைக்கு இதை ஏற்றுக் கொள்வது சற்று கடினம் தான்.

பேட்டிங் நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்களால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்தினோம்.

சல்மான் அலி அகா -Salman Ali Agha,சல்மான் அலி அகா -Salman Ali Agha,

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் அடிக்க முடியாததற்கு காரணம், சரியாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை.

அதனால் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இந்தப் பிரச்னையை விரைவில் நாங்கள் சரி செய்ய போகிறோம்.

பவுலிங் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஓர் அணியாக இதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

மேலும் நாங்கள் எதிர்நோக்குவதற்கு நிறைய இருக்கிறது. தொடர்ந்து நாங்கள் முன்னேறுவோம். வலுவாக மீண்டு வருவோம்." என்று கூறினார்.

எந்தச் செலவு செய்தாலும் குற்ற உணர்வு வருகிறதா?- இவை எல்லாம்தான் காரணம்..!
Read Entire Article