ARTICLE AD BOX
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்தியாவை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது.
சொந்த மண்ணில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிமறுபக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா மிளிர்கிறார்.
12 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தியிருக்கும் பவுமா அவற்றில் 11 போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறார். ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது.
Rohit - Kohliஇவ்வாறிருக்க, நேற்று (நவம்பர் 30) முன்தினம் ராஞ்சியில் இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் சீனியர் வீரர்கள் ரோஹித் (57), கோலி (135) அமைத்த 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என முன்னிலையில் இருக்கும் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் ஷாஹீத் வீர் நாராயண் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட பவுமா, இந்திய வீரர்களான கோலி, ரோஹித் குறித்து பேசியிருக்கிறார்.
``பவுமா, தோனியைப் போன்றவர்; இருவருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!'' - ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்ராய்பூர் மைதானத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பவுமா, ``அந்த இரு வீரர்களையும் (ரோஹித், கோலி) அணியில் சேர்ப்பது அணியை வலுப்படுத்துகிறது.
தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சொன்னது போல், அவ்விருவரும் நிறைய அனுபவமும் திறமையும் கொண்டவர்கள். அது அவர்களின் அணிக்குப் பயனளிக்கும். இது எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.
ரோஹித் சர்மா - டெம்பா பவுமா2007 டி20 உலகக் கோப்பை என்று நினைக்கிறேன். ரோஹித்துக்கு எதிராக நாங்கள் (தென்னாப்பிரிக்கா) விளையாடினோம். அப்போது நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன்.
அவர்கள் அப்போதிருந்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக ஆடுவது எங்களுக்குப் புதிதல்ல. சில மோசமான முடிவுகளையும் கண்டிருக்கிறோம். அதேவேளையில் சில நல்ல முடிவுகளையும் கண்டிருக்கிறோம். இவையனைத்தும் இந்தத் தொடரைச் சுவாரஸ்யமாக்குகின்றன" என்று கூறினார்.
-On this day in 2007
- 20 year old Rohit Sharma led Team India to victory with played a crucial inning 30(16) in the T20 World Cup final vs pakistan in just his third match. pic.twitter.com/uOA7DPenJ6
2007 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் பெரிய அளவில் இல்லாத தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அப்போது அந்த அணியில் 20 வயது வீரராக ஆடியிருந்த ரோஹித் தலைமையில் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்!
3 weeks ago
2







English (US) ·