IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

4 weeks ago 2
ARTICLE AD BOX

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி.

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி எதிர்கொண்டு வரும் நிலையற்ற தன்மை, சவால் மிகுந்த போட்டிகளில் தொடர் தோல்வி, பிட்சுக்கு ஏற்ற திட்டம் இல்லாமை, குறிப்பிட்ட வீரர்களுக்கு அதீத முக்கியத்துவம் போன்ற சிக்கல்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

அஷ்வின், ஏபிடிஅஷ்வின், ஏபிடி

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூடியூப் சேனலில், கம்பீர் 'உணர்ச்சிப்பூர்வமான' வீரராக இருந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

அதில், "இந்திய தரப்பில் பார்க்கும்போது இது மிகக் கடினம். தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் ஜிஜி (கவுதம் கம்பீர்) எப்படி எனத் தெரியவில்லை. எனக்கு அவரை எமோஷனாலான வீரராகத் தெரியும், ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அப்படித்தான் என்றால், பொதுவாக ஒரு எமோஷனலான பயிற்சியாளர் இருப்பது நல்லதல்ல.

ஆனால் அவர் அந்த மாதிரியான கோச்தான். இதில் சரி, தவறு என்பது கிடையாது.

Gautam GambhirGautam Gambhir

சில வீரர்கள் உடன் விளையாடிய முன்னாள் வீரர்களுடன் சகஜமாக இருப்பார்கள். சில வீரர்கள் இதற்கு முன்பு விளையாடியதில்லை என்றாலும், பயிற்சி அளிப்பதில் பல வருட அனுபவம் உள்ள ஒரு பயிற்சியாளருடன் வசதியாக உணர்வார்கள்" எனப் பேசியுள்ளார் ஏபிடி.

தொடர்ந்து, "நான் ஷுக்ரி (தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்) தலைமையில் விளையாடியதில்லை, இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் கவுதம் கம்பீருடன் இருந்ததில்லை. அதனால் திரைக்குப் பின்னால் உள்ள இயக்கவியல் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் இது வித்தியாசமானதாக இருக்கும்.

கேரி கிர்ஸ்டனின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்; அவர் ஒரு முன்னாள் வீரர், கவுதம் கம்பீரைப் போலவே இருக்கிறார். முன்னாள் வீரர் ஒருவர் அங்கு இருப்பதைப் பார்க்கும்போது சில வீரர்கள் தன்னம்பிக்கையையும், சௌகரியத்தையும் உணரலாம்" என்றும் பேசினார்.

Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
Read Entire Article