ARTICLE AD BOX
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்குவதில் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?
Ind vs SAபெண்கள் உலகக்கோப்பையில் இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்துமே கோலோச்சியிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணி 7 முறையும் இங்கிலாந்து அணி 4 முறையும் வென்றிருக்கின்றன.
ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து இல்லாத ஒரு இறுதிப்போட்டி இதுவரை நடந்ததே இல்லை. ஆஸ்திரேலியா , இங்கிலாந்து தவிர்த்து நியூசிலாந்து மட்டுமே ஒரே ஒரு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதனாலயே இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்த இறுதிப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இந்தியாவுக்கு இது மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டி. ஏற்கனவே 2005, 2017 ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்த இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. போட்டிக்காம டாஸ் 2:30 மணிக்கு போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவி மும்பையில் மழை பெய்து வருவதால் இன்னமும் டாஸ் போடப்படவில்லை.
Harmanpreet Kaurஒரு வேளை மழை தொடர்ந்தாலோ அல்லது இடையிடையே மழை குறுக்கிட்டாலோ என்ன நடக்கும்? இது இறுதிப்போட்டி என்பதால் இதற்கு ரிசர்வ் டே உண்டு.
அதனால் இன்று போட்டியை நடத்த முடியவில்லையெனில் நாளை நடத்துவார்கள். இந்தப் போட்டியில் ரிசல்ட்டை பெற வேண்டுமெனில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்களையாவது ஆட வேண்டும்.
20 ஓவர்களை கூட ஆட முடியவில்லையெனில் போட்டி ரிசர்வ் டேக்கு செல்லும். நாளையும் மழை பெய்து போட்டி நடக்கவில்லையெனில் கோப்பை இரு அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
Ind v SA: ``அந்த ஒரு விஷயத்துலதான் கவனமா இருக்கோம்!'' - இறுதிப்போட்டி குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத்
1 month ago
3







English (US) ·