ARTICLE AD BOX
இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
indian team ஜெய்ஸ்வால் மற்றும் கில்லின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 518 ரன்களை எடுத்தது.
பதிலுக்கு பேட்டிங்கை தொடங்கி 248 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பாலோ ஆன் ஆகி இரண்டாம் இன்னிங்ஸில் 390 ரன்களை எடுத்தது.
இந்திய அணிக்கு 121 ரன்கள் டார்கெட். 3 விக்கெட்டுகளை இழந்தாலும் பெரிய சிரமமின்றி 35.2 ஓவர்களில் இந்திய அணி டார்கெட்டை எட்டிவிட்டது.
இதன் மூலம், இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது.!

2 months ago
4







English (US) ·