ARTICLE AD BOX
சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இந்திரா'.
த்ரில்லர் படமான 'இந்திரா' ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீடு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.
இந்திராஇநிகழ்ச்சியில் பேசிய தெலுங்கு நடிகர் சுனில், "வணக்கம் தமிழ்நாடு. எனக்கு பெரும் ஆதரவு தருகிறீர்கள்.
சபரீஷ் முதலில் கதை சொன்ன போது, என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு கேரக்டரை பார்த்ததே இல்லை என்று தோன்றியது.
டப்பிங்கில் என்னைப் பார்க்கும்போது எனக்கே பயமாக இருந்தது.
100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன், 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன் ஆனால் இந்த மாதிரியான ஒரு கதை பார்த்ததே இல்லை.
நடிகர் சுனில் இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வசந்த் ரவி மிக இனிமையாகப் பழகினார்.
வித்தியாசமான படங்கள் மட்டும்தான் செய்கிறார். இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.
Indra: "இந்த விஷயத்தில் ரஜினி சாரை விட சுனில் சார் ஒரு ஸ்டெப் மேல" - வசந்த் ரவிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·