ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.
Ind v Ausஸ்மித் பேசுகையில், 'இது கொஞ்சம் வறண்ட பிட்ச்சாக இருக்கிறது. அதனால் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எடுத்து அவர்கள் மீது அழுத்தம் ஏற்ற வேண்டும். இந்திய அணி சிறந்த அணி. இந்தப் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும். கான்லியையும் ஸ்பின்னரான தன்வீர் சங்காவையும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.' என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது, 'இங்கிருக்கும் பிட்ச்கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருக்கின்றன. கடந்த 3 போட்டிகளிலுமே ஒவ்வொரு போட்டியிலுமே வித்தியாசமான அனுபவம்தான் வாய்த்திருக்கிறது. என்ன செய்வதென குழப்பத்தில் இருக்கையில் டாஸை தோற்பது சிறந்தது. ஒவ்வொரு முறை இங்கு ஆடும்போதும் எங்களுக்கு சவாலாகத்தான் இருந்திருக்கிறது. மெதுவாக வீசக்கூடிய பௌலர்கள் இங்கே சாதித்திருக்கிறார்கள். அதனால் இந்தப் போட்டியிலும் நான்கு ஸ்பின்னர்களுடனேயே செல்கிறோம். நாங்கள் கடந்த போட்டியில் எங்கே விட்டோமோ அங்கிருந்தே தொடங்க நினைக்கிறோம்.' என்றார்.

ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 14 வது முறையாக டாஸை தோற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 months ago
9







English (US) ·