ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான இந்தப் போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
கான்லிஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 264 ரன்களை எடுத்திருந்தது. ஸ்மித்தும் கேரியும் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஆஸி 300 ரன்களை கடக்குமோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால், இந்திய பௌலர்கள் அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து ஆஸியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். போட்டியின் முதல் இன்னிங்ஸை பற்றி முந்தைய கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறோம்.
மெதுவான துபாய் பிட்ச்சில் 265 ரன்கள் என்பதே சவாலான டார்கெட்தான். இதில் ஆஸ்திரேலிய அணி கூடுதல் ஸ்பின்னர்களை வேறு இறக்கியிருந்தது. தன்வீர் ஷங்கா முழு நேர ஸ்பின்னர். பேட்டிங்கில் ஓப்பனிங் இறங்கிய கான்லி பார்ட் டைம் ஸ்பின்னர். ஆடுவது ஆஸிக்கு எதிராகவென்பதால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பதைபதைப்புடனே இருந்தனர்.
IND vs AUS: ``துபாய் மைதானம் எங்களுக்கும் புதிதுதான்" - விமர்சனங்களுக்கு ரோஹித் தரும் விளக்கம் என்ன?இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. வார்சூயிஸூம் நேதன் எல்லிஸூம் ஓப்பனிங் ஸ்பெல்லை வீசினர். அதிரடியாக ஆட வேண்டும், பவர்ப்ளேயை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ரோஹித்தின் எண்ணமாக இருந்தது. ஒரு சிக்சரையும் சில பவுண்டரிகளையும் வேறு அடித்திருந்தார். ஆரம்ப சில ஓவர்களுக்குள்ளாகவே ரோஹித்துக்கு 2 கேட்ச்களை ட்ராப்பும் செய்திருந்தனர். கான்லி ஒரு முறையும் லபுஷேன் ஒரு முறையும் கோட்டை விட்டிருந்தனர். ஆனால், இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ரோஹித் பெரிய இன்னிங்ஸையெல்லாம் ஆடவில்லை. கான்லியின் பந்தில் 28 ரன்களில் lbw ஆகினார். இடையில் கில் வார்சூயிஸின் பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டை பறிகொடுத்தார்.
விராட்பவர்ப்ளேக்குள்ளாகவே ஓப்பனர்கள் இருவரையும் இழந்து 43-2 என இந்திய அணி திணறியது. இந்த சமயத்தில்தான் விராட் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும் கூட்டணி சேர்ந்தனர். கோலி ஆங்கர் ரோலை எடுத்துக் கொண்டார். ரிஸ்க்கே எடுக்காமல் தட்டி தட்டி ஆடினார். இன்னொரு பக்கம் ஸ்ரேயாஷ் ஐயர் ஏதுவான பந்துகளை பவுண்டரியாக்கினார். இதனால் டாட்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருந்தது. தேவைப்பட்ட ரன்ரேட்டும் எகிறவில்லை. கோலி அத்தனை க்ளாஸாக ஆடினார். கிட்டத்தட்ட ஒரு செகண்ட் பிடில் ஆட்டம். ஆனால், அத்தனை பொறுமையும் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டிய பக்குவமும் இருந்தது. ஸ்ரேயாஷ் கான்லியை குறிவைத்து அட்டாக் செய்தார். இருவருமே Running Between the Wicket இல் அதிக கவனம் செலுத்தினார். 'Never Underestimate the value of a humble Singles'
இருவரும் ஆடிக்கொண்டிருந்த போது வர்ணனையில் ஹர்ஷா போக்ளே இப்படி பேசிக்கொண்டிருந்தார்.
துபாய் மைதானத்தில் ஒரு கல்வெட்டில் எழுதி வைக்க வேண்டிய வாசகம் அது. கோலியும் ஸ்ரேயாஷூம் இணைந்து 91 ரன்களை எடுத்திருந்தனர். இன்னும் கொஞ்ச நேரம் இந்த கூட்டணி நிலைத்திருந்தால் இந்திய அணி போட்டியை சௌகர்யமாக வென்றிருக்கும். ஆனால், ஷம்பாவின் பந்தில் 45 ரன்களில் ஸ்ரேயாஷ் ஐயர் அவுட். அதே ஷம்பாவின் பந்தில் பவுண்டரி அடித்து கோலி அரைசதத்தை கடந்தார். நம்பர் 5 இல் வந்த அக்சரும் ஆட்டத்தை மெதுவாக்காமல் கோலியின் டெம்போவிலேயே ஆடி 27 ரன்களை எடுத்தார். நேதன் எல்லிஸ் ஒரு ஸ்லோயர் ஒன்னை வீசி விட்டு வேகமாக வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியில் போல்டை பறிகொடுத்து அவுட் ஆனார். இந்த சேஸ் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது அங்கே தெரிந்தது.
Virat - Shreyas178-4 என்ற நிலையில் இருந்த போது கே.எல்.ராகுல் உள்ளே வந்தார். இடையில் 51 ரன்களில் இருந்த போது கோலிக்கு ஒரு கேட்ச்சையும் மேக்ஸ்வெல் விட்டிருந்தார். கோலிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் Run a ball இல் ஆடி ராகுல் ஒத்துழைத்தார். இடையிடையே பவுண்டரிக்களையும் சிக்சரையும் அடித்தார். கோலி அப்படியே நின்று ஆடிக்கொண்டிருந்தார்..சதத்தை நெருங்கினார். மேட்ச் வின்னிங் சதத்தை அடிப்பார் என்றுதான் தோன்றியது. ஆனால், 43 வது ஓவரில் ஷம்பாவின் கூக்ளியில் லாங் ஆனில் ஒரு பெரிய சிக்சருக்கு முயன்று 84 ரன்களில் கேட்ச் ஆனார். நல்ல இன்னிங்ஸ். கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அந்த ஓவரில் அதற்கு முன் ராகுல் ஒரு சிக்சர் அடித்திருந்த போதும் அவசரப்பட்டு ஷாட் ஆடி அவுட் ஆகிவிட்டார்.
இந்திய அணி மீது அழுத்தம் கூடியது. ஆனாலும் அடுத்தடுத்து பேட்டர்களாக இருந்ததால் கொஞ்சம் பிரச்சனையில்லாமல் இருந்தது. நம்பர் 7 இல் ஹர்திக் உள்ளே வந்தார். நிலைமை புரியாமல் நிறைய டாட்கள் ஆடி கடுப்பேற்றினார். ஆனால், அடுத்தடுத்து பெரிய சிக்சர்களை அடித்து போட்டியை நெருக்கமாக கொண்டு வந்துவிட்டு 6 ரன்கள் தேவை எனும்போது வின்னிங் ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார். அவருக்கு பதில் ராகுல் சிக்சர் அடித்து முடித்து வைத்தார்
Indiaநாக் அவுட்டில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது இமாலய சாதனை. அதை இந்திய அணி செய்திருக்கிறது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது. வாழ்த்துகள் பாய்ஸ்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·