INDvSA: "கோலி, ரோஹித் போன்ற மூத்த வீரர்கள் இருப்பது உத்வேகத்தைத் தருது" - கேப்டன் கே.எல்.ராகுல்

4 weeks ago 2
ARTICLE AD BOX

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று (நவ. 30) ஆம் தேதி ராஞ்சியில் மதியம் 1.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

ind vs sa match ind vs sa match

இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். இந்நிலையில் நேற்று (நவ.29) செய்தியாளர்களைச் சந்தித்து கே.எல்.ராகுல் பேசியிருக்கிறார்.

"ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடப் போதுமான திறமை கொண்டவர். ஆனால் அவர் விளையாடினால் விக்கெட் கீப்பிங் செய்வார். அவர் விளையாடுவாரா என்பதை நாளை பார்ப்போம்.

ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர். அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு வாய்ப்பளிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நான் 6வது இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அங்குதான் நான் விளையாடி வருகிறேன்.

ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பதற்கு முந்தையநாள் நான் கேப்டனாக அணியை வழிநடத்துவது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது.

நான் இதற்கு முன்பும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறேன். எனக்கு கொடுக்கும் பொறுப்பை நான் எப்போதும் ரசிப்பேன்.

கே.எல்.ராகுல் கே.எல்.ராகுல்

இந்தத் தொடரில் கோலி, ரோஹித், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளது உத்வேகத்தைத் தருகிறது. ஆட்டத்தில் வெற்றியே முக்கியம்.

டெஸ்ட் தொடரில் நடந்ததை மறந்துவிட்டு ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை ஆட முயற்சி செய்வோம். ஆடுகளத்தைப் பார்த்த பிறகு பிளேயிங் 11 முடிவு செய்யப்படும்" என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article