IPL 2025 Final: "மனவேதனையைத் தரும்" - ஷ்ரேயஸ், கோலி... யாருக்கு ஆதரவு? ராஜமௌலி ஓப்பன் டாக்

6 months ago 8
ARTICLE AD BOX

நாளை (02.06.2025) IPL 2025 சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதும் இந்த போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை அதிரடியாக வென்று தகுதி பெற்றுள்ளது ஷ்ரேயஷ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஷ்ரேயஸ் ஐயர், விராத் கோலி ஷ்ரேயஸ் ஐயர், விராத் கோலி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli: ``விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..'' - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

எந்த அணி வெற்றிபெற்றாலும் புதிய சாம்பியன் உருவாவது உறுதி எனும் நிலையில், எந்த அணிக்கு சப்போர்ட் செய்வது என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழப்பம் பிரபலங்களுக்கும் பொருந்துகிறது. திரைப்பட இயக்குநர் ராஜமௌலி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எந்த அணி வென்றாலும் தனக்கு மனவேதனைதான் எனக் கூறியுள்ளார் ராஜமௌளி.

எஸ்.எஸ். ராஜமௌலிஎஸ்.எஸ். ராஜமௌலி

"பும்ரா மற்றும் போல்டின் யாக்கர்களை 3rd மேன் பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அடிக்கும் விதம் அருமை...

ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி அவரை வெளியேற்றியது.

கொல்கத்தாவுக்குக் கோப்பையை வென்றுகொடுத்தார். ஆனால் அந்த அணியும் அவரைக் கைவிட்டது.

தற்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர்.

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' - ஏன் தெரியுமா?

மற்றொருபுறம் விராட் கோலி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடுகிறார். ஆயிரம் ரன்கள் சேர்க்கிறார். அவருக்கான இறுதி எல்லையில் இருக்கிறார்... அவரும் கோப்பையை வெல்லத் தகுதியானவர்.

ரிசல்ட் எதுவாக இருந்தாலும்... அது மனவேதனையையே அளிக்கப் போகிறது." என எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார் ராஜமௌலி.

Iyer guiding Bumrah’s and Boult’s yorkers to the third man boundary… Exquisite…

This man leads Delhi to a final… and is dropped…
Leads Kolkata to a trophy… dropped…
Leads a young Punjab to the finals after 11 years.
He deserves this year’s trophy too…

On the other hand,… pic.twitter.com/ws0anhcZ3l

— rajamouli ss (@ssrajamouli) June 2, 2025

ராஜமௌலியின் பதிவுக்கு ரிப்ளை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, "ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டத்தை உங்கள் ப்ளாக்பஸ்டரில் ஒன்றைப் போல உணர்ந்தோம். பாகுபலி போன்ற தலைமை, ஆர்ஆர்ஆர் போன்ற எழுச்சி மற்றும் ஈகா பாணியில் கம்பேக்.

க்ளைமேக்ஸ் நெருங்குகிறது... தலைசிறந்த கதைசொல்லி அதை நேரலையில் பார்ப்பார் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு என்பதை கமண்டில் தெரிவியுங்கள்!!!

IPL 2025: கோலி, தோனி, ரெய்னா... 17 சீசன்களிலும் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் யார்?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article