IPL 2025: "RCB கப் ஜெயிக்கலனா கணவரை விவாகரத்து செய்வேன்" - வைரலாகும் பெங்களூரு பெண் ரசிகை சபதம்

7 months ago 8
ARTICLE AD BOX

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

நேற்று நடந்த ப்ளே ஆஃப் போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்.சி.பி அணியும் மோதிக்கொண்டன. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் ஆர்.சி.பி அணியின் சுழற்பந்து வீச்சாளர் சூயஸ் சர்மா பஞ்சாப் அணியில் பேட்ஸ்மென்களைப் பதம்பார்த்தார். அவர் மூன்று ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

இதில் பஞ்சாப் அணி வெறும் 14.1 ஓவர்கள் மட்டும் விளையாடி 101 ரன் எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

அதனைத் தொடர்ந்து வந்த ஆர்.சி.பி. அணி வெறும் 2 விக்கெட்களை இழந்து 10 ஓவரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியைக் காண ரசிகர்கள் திரளாகக் கூடி இருந்தனர். அவர்களில் ஒரு ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அப்பெண் ரசிகை கையில் ஒரு பதாகையை ஏந்தியபடி ஆர்.சி.பி அணியை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.

விராட் கோலிவிராட் கோலி

அவர் கையிலிருந்த பதாகைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றி பெறவில்லையெனில் எனது கணவரை விவாகரத்து செய்துவிடுவேன் என்று அப்பதாகையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்தப் பதாகையை அப்பெண் கையில் ஏந்திப்பிடித்தபடி பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

இப்போது அப்பெண்ணின் புகைப்படமும், அவர் கையில் வைத்திருந்த பதாகையும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கின்றன.

ஐ.பி.எல் வரலாற்றில் 2016ம் ஆண்டிற்குப் பிறகு ஆர்.சி.பி அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு வந்தது கிடையாது. இப்போதுதான் விராட் கோலி தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. இதனால் ஆர்.சி.பி அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Kohli: விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மார்க் ஷீட் இணையத்தில் வைரல்! - எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article