IPL 2025: 'இன்று நம்முடைய நாள்; விளையாடி...'- வாழ்த்து தெரிவித்த ஸ்ரேயஸின் சகோதரி, தாய்

6 months ago 9
ARTICLE AD BOX

18-வது ஐ.பி.எல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இன்று(ஜூன் 3) குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

RCB vs PBKS - IPL 2025 FINALRCB vs PBKS - IPL 2025 FINAL

இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாததால், எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் வெற்றிபெற பஞ்சாப் அணிக்கு வாழ்த்து தெரிவித்து கேப்டன் ஸ்ரேயஸின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வீடியோ வெளியிட்டிருகின்றனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " பஞ்சாப் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ஐபிஎல் தொடங்கிய நாளில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறீர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

Shreyas IyerShreyas Iyer

இறுதிப்போட்டியில் விளையாட உள்ள பஞ்சாப் அணிக்கு எங்களுடைய வாழ்த்துகள். இன்று நம்முடைய நாள். விளையாடி கோப்பையை வெல்லுங்கள்" என்று நெகிழ்ச்சியாக வீடியோ பதிவிட்டிருக்கின்றனர் .

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article