ARTICLE AD BOX
'சென்னை தோல்வி!'
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்திருந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி மிக எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
CSKபோட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி வந்திருந்தார்.
'இக்கட்டான கட்டங்களில்தான் உண்மையான ரசிகர்கள் யாரென்று தெரிந்துகொள்ள முடியும்' என ஹஸ்ஸி பேசியிருக்கிறார்.
'ஹஸ்ஸி நம்பிக்கை!'
ஹஸ்ஸி பேசியதாவது, "எங்கள் மூத்த வீரர்களிடம் இன்னும் நல்ல கிரிக்கெட் ஆடும் திறன் இருக்கிறது என நம்புகிறோம்.
ரஹானே, வாட்சன் எனப் பலரும் அப்படி சென்னைக்குச் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். இனி தொடரில் அடுத்த கட்டத்திற்கு [பிளேஆஃப்] செல்ல முடியாது என்ற நிலையில் அணிகள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். அந்த இடத்திற்கு இன்னும் நாங்கள் செல்லவில்லை என நினைக்கிறேன்.
Husseyநாங்கள் பிளேஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது என இன்னும் வெள்ளைக் கொடியைக் காட்டி விடவில்லை.
நிச்சயமாக இந்த தோல்வி எங்களை ரொம்பவே காயப்படுத்துகிறது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியின் உதவியாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் இது நிச்சயம் காயப்படுத்தும்.
இதற்காக நிறைய விமர்சனங்களை நாங்கள் சந்திப்போம் என எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்த விமர்சனங்களுக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.
CSK : 'ரெய்னா, பத்ரிநாத் போன்ற வீரர்களை சிஎஸ்கே தவறவிடுகிறது!' - ஹர்ஷா போக்லே கருத்துஇதுபோன்ற கடினமான நேரங்களில்தான் உங்களின் உண்மையான ரசிகர்கள் யார் என்பது தெரியும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

8 months ago
8







English (US) ·