ARTICLE AD BOX
நடப்பு ஐ.பி.எல் சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.பி.எல் இணையதளத்தில் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும், தமிழ் உட்பட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் அபிஷேக் சர்மா'பத்திரிகையாளர் சந்திப்புகளின் வழக்கம்!'
கடந்த மார்ச் 22 ஆம் தேதி 18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கியது. ஒவ்வொரு போட்டிக்கு முந்தைய நாளும் போட்டி முடிந்த பிறகும் என ஒரு போட்டிக்கு இரண்டு முறை பத்திரிகையாளர் சந்திப்புகள் நடக்கும். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புகளில் இரண்டு அணிகளிலிருந்தும் யாராவது ஒரு வீரரோ அல்லது அணியின் பயிற்சியாளரோ வந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தினேஷ் கார்த்திக்ஒரு போட்டிக்கு முந்தைய நாளை 'Minus Day' என்பார். அந்த நாளில் நடக்கும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை (Pre Match Press Conference) எல்லா ஊடகத்தினரும் ஒளிபரப்பு செய்துகொள்ளலாம். அதற்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும்.
'Match Day' வில் நடக்கும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பை பிசிசிஐ மட்டுமே படம்பிடித்து ஒளிபரப்பு செய்யும். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு ஐ.பி.எல் இன் iplt20.com இல் மட்டுமே வெளியாகும். இதுதான் நடைமுறை.
பத்திரிகையாளர் சந்திப்பில் ஹேமங் பதானிகடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியை டெல்லி வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சேப்பாக்க மைதானத்தின் பத்திரிகையாளர் அறைக்கு டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி வந்திருந்தார்.
CSK : 'அஷ்வின், திரிபாதி ப்ளேயிங் லெவனில் இருக்கக்கூடாது!' - ஏன் தெரியுமா?'கத்தரிக்கப்பட்ட தமிழ்!'
ஹேமங் தமிழக வீரர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹேமங் பதானியிடன் தமிழ் ஊடகத்தைச் சேர்ந்த இரண்டு நிருபர்கள் தமிழில் கேள்வி கேட்டனர். உங்களின் வழிகாட்டலில் டெல்லி 3 போட்டிகளை வென்றிருக்கிறது. இந்த சீசனில் இனி டெல்லியின் பயணம் எப்படியிருக்கும்? என்றும் சென்னையில் சென்னை அணியை எதிர்கொள்ள என்ன திட்டமிடல்களோடு வந்தீர்கள்? என்பதும்தான் அந்த இரண்டு கேள்விகள். அதற்கு ஹேமங் தமிழிலேயே பதிலும் சொல்லியிருந்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன் அந்த வீடியோ iplt20.com இணையத்தில் வெளியாகியிருந்தது. அதில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹேமங் தமிழில் சொன்ன பதில்கள் மட்டும் இடம்பெறவில்லை. அவை கத்தரிப்பு செய்யப்பட்டிருந்தது.
Ashwinஇதேமாதிரியான ஒரு சம்பவம் முன்பும் நடந்திருந்தது. கடந்த ஆண்டு வங்கதேசம் சென்னைக்கு வந்திருந்தது. அப்போது நடந்த டெஸ்ட் போட்டியில் அஷ்வின் நன்றாக ஆடியிருந்தார். போட்டிக்குப் பிறகு அஷ்வின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். அப்போது விகடன் சார்பாக சென்றிருந்த நான், 'சென்னையில் மட்டும் தவறாமல் பெர்பார்ம் செய்கிறீர்களே. இங்கே உங்களின் சக்சஸ் சீக்ரெட்? என தமிழில் எனது கேள்வியைக் கேட்டேன்.
அதற்கு, அஷ்வினும் தமிழிலேயே பதில் கூறியிருந்தார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை பிசிசிஐ அவர்களது தளத்தில் வெளியிட்டபோது அதிலும் தமிழில் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு அஷ்வின் தமிழில் சொன்ன அந்த பதில் கத்தரிப்பு செய்யப்பட்டிருந்தது.
CSK : 'கே.எல் ராகுலுக்கு பதில்தான் திரிபாதி'- ஏலத்தில் சிஎஸ்கே தவறவிட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் கத்தரிக்கப்படும் நிலையில், இந்தியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்தியிலேயே வீரர்கள் கொடுக்கும் பதில்கள் அப்படியே வெளியாகின்றன. நேற்று மும்பை வீரர் கரன் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் முழுக்க முழுக்க இந்தியில் பேசியிருக்கிறார். அது அப்படியே ஒளிபரப்பாகியிருக்கிறது. அதேநேரத்தில், தமிழ் உட்பட பிராந்திய மொழிகளில் கேட்கப்படும் ஒன்றிரண்டு கேள்விகளும் அப்படியே கத்தரிக்கப்படுகின்றன.
இதுசம்பந்தமாக விவரமறிந்த சிலரிடம் விசாரிக்கையில், 'பிசிசிஐயின் தொழில்நுட்ப குழுவில் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். பிராந்திய மொழிகளில் வீரர்கள் பேசும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட அவர்களுக்கு தெரியாது. எதாவது சர்ச்சையான விஷயங்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக பிராந்திய மொழியில் பேசப்படுபவற்றை அப்படியே கத்தரித்து விடுகின்றனர்.' என்றனர்.
பிசிசிஐ பொருளாதார அளவில் உலகின் சக்திமிக்க கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ முதன்மையானது. அப்படியிருக்க பிராந்திய மொழிகளில் பேசப்படுபவற்றை ஒளிபரப்பு செய்ய தேவையான கூடுதல் செலவை ஏற்க முடியாத நிலையிலெல்லாம் பிசிசிஐ இல்லை. மேலும் கிரிகெட் என்கிற விளையாட்டு அனைத்து பேதங்களையும் உடைத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒன்று. அப்படியிருக்க அதில் இந்தப் பாகுபாடு ஏன் ? IPL போட்டியில் பிராந்திய அணிகளாகப் பிரிந்து விளையாடி, அந்தந்தப் பகுதி மக்கள் கொண்டாடும் ஒன்றாக இருக்கிறது. அப்படியிருக்கையில் அதிலும் பிராந்திய மொழிகளுக்கு இடமில்லை என்பதில் எவ்வித அறமும் இல்லை.

8 months ago
8







English (US) ·