IPL 2025 : 'ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா?' - பிசிசிஐ துணைத்தலைவர் அளித்த விளக்கம் என்ன?

7 months ago 8
ARTICLE AD BOX

ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப் vs டெல்லிபஞ்சாப் vs டெல்லி

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கருத்து தெரிவித்திருக்கிறார். 

ஐ.பி.எல் தொடர்ந்து நடக்குமா?

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மாறுகிறது. தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

ராஜிவ் சுக்லாராஜிவ் சுக்லா

ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவினை எடுக்க உள்ளோம். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article