IPL 2025: ஜாலியாக கன்னத்தில் தட்டிய குல்தீப்... சட்டென ரின்கு சிங் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்! | Video

7 months ago 8
ARTICLE AD BOX

கொல்கத்தா அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நேற்று (ஏப்ரல் 29) ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது.

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் அடித்தார். டெல்லியில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை, விப்ராஜ், அக்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரஹானே - அக்சர்ரஹானே - அக்சர்

அடுத்து களமிறங்கிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 62 ரன்களும், அக்சர் 43 ரன்களும் அடித்தனர்.

கொல்கத்தா அணியில் ஆன்ஃபீல்டு கேப்டனாகச் செயல்பட்ட சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Yo kuldeep watch it pic.twitter.com/z2gp4PK3OY

— irate lobster (@rajadityax) April 29, 2025

இந்த நிலையில், போட்டி முடிந்து இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, டெல்லி வீரர் குல்தீப் யாதவ், ரின்கு சிங் கன்னத்தில் ஜாலியாகத் தட்டியதும், அதற்கு ரின்கு சிங் கொடுத்த ரியாக்சனும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகிக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில், குல்தீப் வீசிய 15-வது ஓவரில், ரின்கு சிங் மட்டும் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 16 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DC vs KKR: ``போட்டியின் திருப்புமுனையே அவர் வீசிய அந்த 2 ஓவர்தான்'' - வெற்றி குறித்து ரஹானே

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

Read Entire Article