ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரின் நேற்றையப் (ஏப்ரல் 13) போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது மைதானத்தில் வைத்து அம்பயர் ஹர்திக் பாண்டியாவின் பேட்டை சோதனைச் செய்தார். எதற்காக அம்பயர் இவ்வாறு செய்தார்? அவர் என்ன தவறு செய்தார்? என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
ஹர்திக் பேட்டை செக் செய்த அம்பயர் இது தொடர்பானப் புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிகளின்படி வீரர்களின் பேட்டானது அனுமதிக்கப்பட்ட சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட விதி உள்ளது. அதை அளக்கும் கருவியும் உள்ளது.
அம்பயருக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர் போட்டியில் எந்த நேரத்திலும் ஒரு பேட்ஸ்மேனின் பேட்டை அந்த கருவியை வைத்து அளந்து பார்க்கலாம்.
அந்த அளவுக்கு மாறாக பேட் இருந்தால் சர்வதேச போட்டிகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் விதிப்படி தண்டனை விதிக்கப்படும். அந்தவகையில்தான் நேற்று ஹர்திக்கின் பேட்டை அம்பயர் சோதனைச் செய்தார்.
ஹர்திக் அவரின் பேட் சரியான அளவில்தான் இருந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஹர்த்திக்கை அம்பயர் பேட்டிங் செய்ய அனுமதித்திருக்கிறார். விதிகளின் படி பேட்டின் அகலம் 4.25 இன்ச்சுக்கு உள்ளும் பக்கவாட்டு அகலம் 2.64 இன்ச்சுக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·