ARTICLE AD BOX
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.
இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றிருக்கிறது.
Mumbai Indians அணியின் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் சிறப்பாக இருந்ததாக நான் நினைத்தேன். அது அவர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. வெற்றியை நோக்கி சென்றனர்.
பும்ராவை பந்து வீச அழைப்பது மிகவும் எளிது
எனினும் எங்களின் பதற்றத்தை அகற்றி அவர்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்தோம். ரோஹித் ரிதமுக்கு வந்து, சூப்பராக பேட்டிங் செய்தார். அதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. நாங்கள் எங்கள் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி விளையாடினோம்.
பும்ராவை பந்து வீச அழைப்பது மிகவும் எளிது. விளையாட்டு கையை விட்டு போகிறது என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம், அவரை பந்துவீச அழைக்கலாம்.
Hardik Pandyaஅப்படிதான் 18வது ஓவரை அவர் வீசுவது முக்கியம் என நினைத்தேன். அவர் மும்பை அணியின் மிகவும் விலை உயர்ந்த சொத்து.
அடுத்த போட்டி முக்கியமானது. அதற்கு முன் வீரர்களுக்கு ஓய்வும் முக்கியம். வரும் ஆட்டங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

6 months ago
8







English (US) ·