IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

7 months ago 8
ARTICLE AD BOX

இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன.

IPL 2025IPL 2025

'புதிய விதி!'

நடப்பு சீசன் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்குவதால் போட்டி அட்டவணையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதனால் ஒரு சில வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அல்லது ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஐ.பி.எல் நிர்வாகம் Temporary Replacement என்ற விதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

IPL 2025: 'குஜராத்துக்கு பட்லர்; ஆர்சிபிக்கு ஹேசல்வுட்!'- ஐ.பி.எல் யை தவறவிடும் வீரர்களின் பட்டியல்

அதன்படி, ஆட முடியாத வீரர்களுக்கு பதிலாக ஐ.பி.எல் அணிகள் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனால், அவர்களை அடுத்த சீசனுக்காக ரீட்டெய்ன் செய்ய முடியாது.

ButtlerButtler

பட்லருக்கு பதில் யார்?

இந்நிலையில், குஜராத் அணி பட்லருக்கு பதிலாக குஷால் மெண்டிஸை 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஓடிஐ தொடர் மே 29 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்காக பட்லர் மே 26 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறார். அவரால் ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் ஆட முடியாது. அதனால்தான் அவருக்கு பதிலாக குஷால் மெண்டிஸை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

Mayank YadavMayank Yadav

பஞ்சாப் அணி லாக்கி பெர்குசனுக்கு பதில் கைல் ஜேமிசனையும் லக்னோ அணி காயமடைந்திருக்கும் மயங்க் யாதவ்வுக்கு பதில் வில்லியம் ரூர்கியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இன்னுமே இந்த மாற்று வீரர்களின் பட்டியல் நீள அதிக வாய்ப்பிருக்கிறது.

IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacement விதி என்ன?
Read Entire Article