ARTICLE AD BOX
அணி நிர்வாகங்களும், வீரர்களும்!
IPL 2026ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்பை அணி ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்.
அதேபோல சிஎஸ்கே அணி 9 வீரர்களை ரூ.43 கோடிக்கும், சன்ரைசர்ஸ் அணி 10 வீரர்களை ரூ.25 கோடிக்கும், லக்னோ அணி 6 வீரர்களை ரூ.22 கோடிக்கும் டெல்லி அணி 8 வீரர்களை ரூ.21 கோடிக்கும், பெங்களுரூ அணி 8 வீரர்களை ரூ.16 கோடிக்கும், ராஜஸ்தான் அணி 9 வீரர்களை ரூ. 16 கோடிக்கும், குஜராத் அணி 5 வீரர்களை ரூ.12 கோடிக்கும், பஞ்சாப் அணி 4 வீரர்கள் ரூ.11 கோடிக்கும் வாங்க வேண்டும்.
ஐபிஎல் மினி ஏலம்
IPL 2026 Auction 19 வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் இன்று (டிச.16) அபுதாபியில் நடைபெற இருக்கிறது. அபுதாபியில் நடக்கும் இந்த மினி ஏலத்துக்காக 1390 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்களிலிருந்து 350 பேரை மட்டுமே பிசிசிஐ ஏலம் விடப்படும் வீரர்களுக்கான பட்டியலில் சேர்த்திருக்கிறது.
அணி நிர்வாகத்தினர் கொடுக்கும் விருப்ப வீரர்களின் பெயர்களின் அடிப்படையில் பிசிசிஐ அந்தப் பட்டியலைத் தயாரிக்கும். ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில், கடைசி நிமிடத்தில் நேற்றிரவு புதிதாக 19 வீரர்களை பிசிசிஐ அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. ஆக, 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர்.

1 week ago
2







English (US) ·