ARTICLE AD BOX
19 வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் இன்று (16.12.25) அபுதாபியில் நடக்கவிருக்கிறது. தங்கள் அணியின் பலவீனங்களை சரி செய்ய புதிய வீரர்களுக்கு வலை விரிக்க அத்தனை அணிகளும் அபுதாபியில் முகாமிட்டிருக்கின்றன.
IPL Auction (File)அபுதாபியில் நடக்கும் இந்த மினி ஏலத்துக்காக 1390 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்களிலிருந்து 350 பேரை மட்டுமே பிசிசிஐ ஏலம் விடப்படும் வீரர்களுக்கான பட்டியலில் சேர்த்திருக்கிறது. அணி நிர்வாகத்தினர் கொடுக்கும் விருப்ப வீரர்களின் பெயர்களின் அடிப்படையில் பிசிசிஐ அந்தப் பட்டியலை தயாரிக்கும். ஏலம் இன்று மதியம் தொடங்கவிருக்கும் நிலையில், கடைசி நிமிடத்தில் நேற்றிரவு புதிதாக 19 வீரர்களை பிசிசிஐ அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. ஆக, மொத்தம் 369 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர்.
ஆனால், 10 அணிகளுக்கும் சேர்த்தே 77 வீரர்கள் மட்டும்தான் தேவைப்படுகிறார்கள். அதிலும் 31 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள். கொல்கத்தா அணியும் சென்னை அணியும்தான் இந்த ஏலத்துக்கு அதிக தொகையோடு வருகின்றனர். கொல்கத்தா அணி கடந்த மெகா ஏலத்திலேயே 55 கோடி ரூபாயோடுதான் வந்திருந்தது. ஆனால், இந்த மினி ஏலத்துக்கு 64.30 கோடி ரூபாயோடு வந்திருக்கிறது.
SRH v CSKசென்னை அணி மெகா ஏலத்துக்கு 51 கோடி ரூபாயோடு வந்திருந்தது. இப்போது மினி ஏலத்துக்கு 43.40 கோடி ரூபாயோடு வருகிறது. மற்ற அணிகளின் கையிருப்புத் தொகை நிலவரம் (கோடிகளில்) : டெல்லி - 40.50 ஹைதராபாத் - 38.15 லக்னோ - 27.50 பஞ்சாப் - 22 பெங்களூரு - 16.40 ராஜஸ்தான் - 16.05 குஜராத் - 12.50 மும்பை - 2.75
இந்த மினி ஏலத்திலிருந்து வெளிநாட்டு வீரர்களுக்கென ஒரு புதிய விதிமுறையையும் பிசிசிஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது. 'Maximum Fee Rule' என பிசிசிஐ இதை குறிப்பிடுகிறது. அதன்படி எந்த வெளிநாட்டு வீரரும் மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க முடியாது. அதாவது, கடந்த மெகா ஏலத்தின் போது வீரர்களை தக்கவைக்க 18 கோடி ரூபாயை உச்சபட்ச தொகையாக பிசிசிஐ நிர்ணயித்தது. இதை ஒரு அளவுகோலாக எடுக்கிறார்கள். அதேமாதிரி, கடந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்குப் போன வீரரின் தொகையை எடுத்துக் கொள்கிறார்கள்.
Greenஅதன்படி ரிஷப் பண்ட் கடந்த மெகா ஏலத்தில் 27 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். இந்த இரண்டு தொகையில் எது குறைவான தொகையோ அதுதான் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பெறும் உச்சபட்ச சம்பளமாக இருக்க வேண்டும். அதன்படி இந்த மினி ஏலத்தில் எந்த வெளிநாட்டு வீரரும் 18 கோடிக்கு மேல் வாங்க முடியாது. இதில் ஒரு சந்தேகமும் எழும். எனில், எந்த அணியும் வெளிநாட்டு வீரரை 18 கோடிக்கு மேல் ஏலம் கேட்காதா என்றும் தோன்றும். ஏலம் கேட்கும் போது அணிகள் வழக்கம் போல கேட்கலாம்.
Livingstoneஒரு அணி ஒரு வெளிநாட்டு வீரரை 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கிறது எனில், அந்த 25 கோடி ரூபாய் அந்த அணியின் கையிருப்புத் தொகையிலிருந்து கழிக்கப்படும். ஆனால், 18 கோடி ரூபாய் மட்டுமே அந்த வீரருக்கு வழங்கப்படும். மீதமுள்ள 7 கோடி ரூபாய் பிசிசிஐயின் அறக்கட்டளைக்கு சென்றுவிடும். ஆக, அபுதாபியில் ஏலத்துக்கு வரும் எந்த வெளிநாட்டு வீரருக்கும் 18 கோடிக்கு மேல் க்ரெடிட் ஆகாது!

1 week ago
2







English (US) ·