IPL Playoffs: 'அகமதாபாத்தில் மழை; ஆட்டம் என்னவாகும்?' -விதிகள் என்ன சொல்கிறது?

6 months ago 8
ARTICLE AD BOX

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸ் மட்டுமே போடப்பட்டிருக்கும் நிலையில் அஹமதாபாத்தில் மழை பெய்து வருகிறது. ஒரு வேளை மழை அப்படியே தொடர்ந்து போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

IPL Playoffs - RainIPL Playoffs - Rain

ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வே டே உண்டு. அதாவது இறுதிப்போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டால் மறுநாள் மீண்டும் போட்டியை நடத்துவார்கள். இறுதிப்போட்டியை தவிர மற்றப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது.

இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியை பொறுத்தவரைக்கும் 2 மணி நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது போட்டி 7:30 மணிக்கு தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் 9:30 மணி வரைக்குமே ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள். 9:30 மண்க்கு போட்டி தொடங்கினாலும் முழுமையாக 20 ஓவர் போட்டியாக நடந்துவிடும். 9:30 க்குள் போட்டியை தொடங்க முடியாவிடில் அடுத்த ஒவ்விரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைந்துகொண்டே வரும்.

PBKS vs MIPBKS vs MI

கடைசியாக 11:56 மணிதான் Cut Off Time. 11:56 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்திவிட முடியும். 11:56 மணியையும் கடந்துவிட்டால் அவ்வளவுதான். போட்டி கைவிடப்படும். ஒருவேளை போட்டி ஆரம்பித்து இடையில் மழை பெய்து போட்டியை அதற்கு மேல் தொடர முடியாவிடிலும் போட்டி கைவிடப்படும். DLS முறையில் ரிசல்ட்டை கொண்டு வர இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது பேட்டிங் ஆடியிருக்க வேண்டும்.

இந்த பஞ்சாப் Vs மும்பை போட்டி கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகளோடு முதலிடத்திலும் மும்பை 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article