IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

1 month ago 2
ARTICLE AD BOX

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெடு நாளையோடு முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், எந்தெந்த வீரர்களை அணிகள் விடுவிக்கப் போகின்றன எந்தெந்த வீரர்களை ட்ரேடிங் முறையில் வாங்கப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Dhoni - Sanju SamsonDhoni - Sanju Samson

ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்கிவிட்டு அதற்கு ஈடாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுக்க சென்னை அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயும் இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவர் என்றும் கூறுகின்றனர்

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவிலிருந்து ஷர்துல் தாகூரையும் குஜராத்திலிருந்து ரூதர்போர்டையும் ட்ரேடிங் முறையில் வாங்கிவிட்டதாக அந்த அணியே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரையும் அந்த அணி விடுவிக்கவிருக்கிறது.

Shardul ThakurShardul Thakur

கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவர்களின் கேப்டன் ரஹானேவை விடுவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா அணி கே.எல்.ராகுலை ட்ரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர்.

அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹென்றிச் க்ளாசனும் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம். சன்ரைசர்ஸிலிருந்து ஷமியை வாங்க டெல்லியும் லக்னோவும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்.

Dhoni - Vijay ShankarDhoni - Vijay Shankar

சென்னை அணியின் முகமான தோனி மேலும் ஒரு சீசனில் ஆடவிருக்கிறார் என்பதை அந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதனே உறுதி செய்திருக்கிறார். கடந்த சீசன் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்றோர் சோபிக்கவே இல்லை. அவர்களை கூண்டோடு சென்னை அணி வெளியேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை விடுவிக்குமென உங்களின் கணிப்புகளை கமெண்ட் செய்யுங்கள்.

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?
Read Entire Article