IPL: "என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.!" - சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

1 week ago 2
ARTICLE AD BOX

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது.

இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்த மதீஷா பதிரனாவை வாங்க டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகள் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பதிரனா.

பதிரனாபதிரனா

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " கிரிக்கெட்டை தாண்டி நம்பிக்கை, தைரியம், மற்றும் எப்போதும் நினைவில் கொள்ளும் அழகிய குடும்பத்தை சிஎஸ்கே எனக்கு கொடுத்திருக்கிறது.

2022 முதல் 2025 சீசன் முடியும் வரை மஞ்சள் ஜெர்சியில் நான் கழித்த ஒவ்வொரு தருணமும் என்னை ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் வடிவமைத்தது.

இந்த அற்புதமான அணிக்காக 50 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது.

IPL 2026 Auction live: இளம் வீரர்கள் பக்கம் திரும்பிய சென்னை... பர பர ஐ.பி.எல் அப்டேட்ஸ்!

தோனி பாய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

அது நிறைவேறவில்லை என்றாலும், அந்த கனவும் முயற்சியும் முழுக்க முழுக்க மனதிலிருந்து வந்ததுதான்.

என் மீது நம்பிக்கை வைத்து வழிகாட்டிய தோனி பாய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் என் மேல் நம்பிக்கை வைத்து துணை நின்ற காசி சார் மற்றும் மேலாண்மை குழுவிற்கும், சகோதரர்களை போல என்னுடன் இருந்த அணியினருக்கும், வெற்றி-தோல்வி அனைத்திலும் ஆதரவு தந்த ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்.

தோனி, பதிரனா தோனி, பதிரனா

சென்னை அணிக்கு எப்போதும் என் இதயத்தில் தனி இடம் உண்டு. மரியாதை, நன்றியுணர்வு, பெருமை ஆகியவற்றுடன், இப்போது நான் அந்த பக்கத்தை முடித்து, கேகேஆர் அணியுடன் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். நன்றி சிஎஸ்கே. நன்றி சென்னை" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Read Entire Article