ARTICLE AD BOX
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள், அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்-இல் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள்அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ரூ. 9 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியது.
IPL: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்; வங்கதேச வீரரை KKR-லிருந்து விடுவிக்க அறிவுறுத்திய பிசிசிஐஇந்த நி்லையில் வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் பிசிசிஐ-யும் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவித்திருக்கிறது. இதுதொடர்பாக கொல்கத்தா அணி வெளியிட்டிருக்கும் பதிவில், "தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்கக் கோரி பிசிசிஐ அறுவுறுத்தியிருக்கிறது.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் - ஷாருக் கான் அந்த அறிவுறுத்தலின் பேரில், முறையான நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி அவரை அணியிலிருந்து விடுவித்திருக்கிறோம்.
ஐபிஎல் விதிமுறைகளுக்கு ஏற்ப கொல்கத்தா அணிக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கி இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கின்றனர்.

1 day ago
2






English (US) ·