IPL: "சஞ்சு சாம்சன் வெளியேறினால் ரியான் பராக்தான் அதற்குக் காரணம்" - முன்னாள் சிஎஸ்கே வீரர்

4 months ago 5
ARTICLE AD BOX

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாகச் சமீப நாள்களாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

இதைவிட முக்கியமாக, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணையப்போவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் மாதக் கணக்கில் பேசப்பட்டு இருக்கிறது.

தோனி - சஞ்சு சாம்சன்தோனி - சஞ்சு சாம்சன்

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறுவதற்கு ரியான் பராக்தான் காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசியிருக்கும் பத்ரிநாத், "ரியான் பராக்தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

ரியான் பராக்கை நீங்கள் கேப்டன் பதவிக்கு நினைத்தால், சஞ்சு சாம்சன் போன்ற ஒருவர் எப்படி அணியில் இருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மேலும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்தால் அவர் தோனிக்கு மாற்றாக இருக்கலாம்.

ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து பெற மும்பை அணி செய்தது போல, சென்னை அணி சாம்சனை வாங்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

சுப்ரமணியம் பத்ரிநாத்சுப்ரமணியம் பத்ரிநாத்

பேட்டிங் ஆர்டரில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆடக் கூடியவர் சஞ்சு சாம்சன்.

ஆனால், அந்த இடங்களில் ஆயுஷ் மாத்ரே, ருத்துராஜ் கெய்க்வாட், டெவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் சிஎஸ்கே-வில் செட்டில் ஆகிவிட்டனர்.

எனவே, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்தாலும், பிளெயிங் லெவனில் அவரைக் களமிறக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது" என்று கூறினார்.

Sanju Samson: 'நடந்தால் பார்ப்போம்' - சிஎஸ்கேவில் இணைகிறீர்களா? சஞ்சு சாம்சன் அளித்த பதில் என்ன?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article