IPL ட்ரேடிங் எப்படி நடக்கும்? சம்பத்தப்பட்ட வீரரின் ஒப்புதல் அவசியமா? - விதிமுறைகள் என்ன?

1 month ago 2
ARTICLE AD BOX

2026-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் பாதியில் நடக்கவிருக்கிறது.

இருக்கின்ற 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் யார், கழற்றிவிடப்போகும் வீரர்கள் யார் என்ற விவரங்களை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில்தான், சி.எஸ்.கே அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகவும், கிட்டத்தட்ட அந்த ட்ரேடிங் உறுதியாகிவிட்டதாகவும் கடந்த சில நாள்களாகத் தினமும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

IPL TeamsIPL Teams

இருப்பினும், சம்பந்தப்பட்ட இரு அணிகளும் மறுக்காமல் அமைதியாக இருப்பதால் அவை வெறும் தகவல்களாக மட்டுமே இருக்கின்றன.

இந்த பரபரப்புக்கு மத்தியில், ஐ.பி.எல்லில் ட்ரேடிங் முறை என்றால் என்ன, அதற்கான விதிமுறைகள் என்ன என்பனவற்றைக் காணலாம்.

ஐபிஎல் ட்ரேடிங்!

ஐ.பி.எல்லில் பிளேயர் ட்ரேடிங் முறை என்பது ஒரு சீசனின் ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி தங்களுக்கு வேண்டிய வீரரைச் சம்பந்தப்பட்ட அணியைத் தொடர்புகொண்டு புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கிக் கொள்வதாகும்.

இது மூன்று வழிகளில் நடைபெறும், ஒன்று தங்களுக்கு வேண்டிய வீரருக்கு ஈடாகத் தங்கள் அணியிலிருந்து ஒரு வீரரைக் கொடுப்பது.

மற்றொன்று, அந்த வீரருக்கு ஈடான முழு தொகையை அந்த வீரரின் கடந்த ஏல மதிப்பு தொகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அணியிடம் கொடுப்பது.

மூன்றாவது வீரரைக் கொடுத்து, மாற்று வீரருக்கு ஈடான ஏல மதிப்பு அந்த வீரருக்கு இல்லாத பட்சத்தில் அதைச் சமன்படுத்த கூடுதல் பணத்தையும் கொடுப்பது.

IPL (ஐ.பி.எல்)IPL (ஐ.பி.எல்)

உதாரணமாகக் கடந்த சீசன் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ. 15 கோடி கொடுத்து வாங்கியது.

அதேபோல், கடந்த சீசனுக்கு முன்பாக லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரைத் தங்களுக்குள் மாற்றிக்கொண்டது.

இதில், லக்னோ அணி இந்த ட்ரேடிங்கை சமநிலைப்படுத்த ராஜஸ்தானுக்கு கூடுதலாக ரூ. 2.25 கோடி வழங்கியது.

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

வீரரின் ஒப்புதல் அவசியம்!

அதேசமயம் ஒரு அணி தனது வீரரை விடுவிப்பதும் தக்கவைப்பதும் அந்த அணியின் உரிமையாளரின் விருப்பம் என்றாலும், சம்பந்தப்பட்ட வீரரின் ஒப்புதல் இல்லாமல் வேறு அணியுடன் ட்ரேடிங் செய்ய முடியாது என்று விதி கூறுகிறது.

அந்த வீரர் ஒப்புக்கொண்ட பிறகே சம்பந்தப்பட்ட இரு அணிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்.

ஒரு வீரர் கட்டாயப்படுத்தப்பட்டு வேறு அணிக்கு ட்ரேடிங் செய்யப்படுவதை இந்த விதி தடுக்குகிறது.

பேச்சுவார்த்தை முடிவில் இரு அணிகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் மேலே குறிப்பிட்ட 3 முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் ட்ரேட் செய்துகொள்ளலாம்.

இவைதான் இப்போது ட்ரேட் முறையில் அணிகளுக்கு இருக்கும் விதிகள்.

சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜாSanju Samson - Ravindra Jadeja

தற்போதைய நிலவரப்படி ஜடேஜா, சஞ்சு சாம்சன் விவகாரத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்கள் வீரர்களிடம் முதலில் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும்.

அவ்வாறு ஒப்புதல் வாங்கியிருப்பின் இன்னும் இரண்டு நாள்களில் முடிவு என்னவென்று அதிகாரப்பூவரமாகத் தெரிந்துவிடும்.

``அந்த 3 பேரை விட்ருங்க; ஆனால் `சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இருக்க வேண்டும்" - Ex CSK வீரர் ரெய்னா
Read Entire Article