Jadeja : 'தோனி என் மேல வச்ச அந்த நம்பிக்கைக்காகதான்..!' - ஜடேஜா எமோஷனல்

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜா அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் கிரிக்கெட் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஜடேஜா முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசன் குறித்து பேசிய ஜடேஜா, 'என் மீது மஹி பாய்(தோனி) வைத்திருந்த நம்பிக்கையைத் திருப்பி செலுத்த வேண்டிய நேரமாக அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இருந்தது.

2023 ஐபில் தொடரின் போது...2023 ஐபில் தொடரின் போது...

மஹி பாய் என்னை சிறந்த வீரராக உருவாக்கியதை நிரூபிக்க வேண்டிய நேரமாகவும் அந்தப் போட்டி இருந்தது. எனது கிரிக்கெட் பயணம் இரண்டு மஹேந்திராக்களுக்கு இடையில் இருக்கிறது.

ஒன்று மஹேந்திர சிங் சவுகான், அவர் எனது சிறுவயது பயிற்சியாளர். இன்னொன்று மஹேந்திர சிங் தோனி, எனது தற்போதைய வழிகாட்டி. இந்த விஷயத்தை நான் மஹி பாயிடமே சொல்லியிருக்கிறேன்.' என்றார்.

மேற்கொண்டு விராட் கோலி குறித்து பேசியவர், 'டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் நேர்மறையான அணுகுமுறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் எப்போதுமே எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த நினைப்பார்.

விராட் கோலி விராட் கோலி

அதனால் எப்போதுமே விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு செல்லவே மாட்டார். ஒரு செஷனாக இருந்தாலும் சரி, 45 ஓவர்களாக இருந்தாலும் சரி அவருக்கு எதிரணியின் அத்தனை விக்கெட்டுகளுமே தேவை" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article