ARTICLE AD BOX
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
#Thalapathy69 #Jananayaganபடக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
இயக்குநர் அட்லீ பேசுகையில், "என்னோட அண்ணன், என்னோட தளபதி! தளபதி எங்களுக்கொரு எமோஷன். உதவி இயக்குநராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் படப்பிடிப்புத் தளத்தின் இறுதி நாளில் 'அட்லீ, நீங்க நல்ல கடினமாக உழைக்கிறீங்க. உங்களுடைய உழைப்பு எனக்குப் பிடிச்சிருக்கு.
கதை இருந்தால் சொல்லுங்க, நம்ம படம் பண்ணலாம்'னு சொன்னாரு. எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் இப்படிப் பண்ணமாட்டாங்க.
அப்போதே அவர் 50 படங்கள் செய்துவிட்டார். அவர் உண்மையாகவே நல்ல மனிதர்!" என்றவர், "என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம், என்னுடைய தளபதி, என்னுடைய விஜய் அண்ணன்தான்." எனப் பேசினார்.
Atlee மேடையில் விஜய் ஸ்டைலில் குட்டிக் கதை சொன்ன அட்லீ, "வாழ்க்கையில் நாம் மூன்று விதமான மனிதர்களைச் சந்திப்போம். இதுக்கு எடுத்துக்காட்டாக மரத்தை எடுத்துக் கொள்வோம்.
சிலர் இலை மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு இருப்பாங்க. பிறகு, காற்று அடிக்கும்போது பறந்து போயிடுவாங்க. அது இயற்கை! இன்னொன்று கிளைகள். அது ரொம்ப வலிமையாக இருக்கும்.
ஆனா, ஒரு சமயத்தில் உடைஞ்சு போயிடும். ஆனா, உங்க பின்னாடி ஒரு கூட்டம் வேர் மாதிரி இருக்காங்க!" என்றவர் மேடையிலிருந்து ஓடிச் சென்று விஜய்யைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

12 hours ago
2







English (US) ·