ARTICLE AD BOX
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
#Thalapathy69 #Jananayaganபடக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "" 'ஜனநாயகன்' அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள்.
Vijay with Lokesh Kanagarajஎனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, 'லியோ -2' படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் 'ப்ளடி ஸ்வீட்' என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள்." என்றார்.

12 hours ago
2







English (US) ·